ஆ.ராசாவுக்கு எதிரான விசாரணைக்கு தடை கோரிய மனு.. தள்ளுபடி செய்ய அமலாக்கத்துறை வலியுறுத்தல்
சென்னை: திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட விசாரணையை துவங்க கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி மக்களவை உறுப்பினராக உள்ள ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவுக்கு சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

அந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை, ஆ.ராசா, நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி, மற்றும் கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார்க் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ்
வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என்றும் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளதால், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் தொடங்க கூடாது என கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவுக்கு பதிலளித்து அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றப்பத்திரிகை நகல்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதால் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை விசாரணையை தள்ளிவைக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கை மற்ற வழக்குகளுடன் ஒப்பிட முடியாது எனவும், மேல் விசாரணையில் புதிய தகவல்கள் சேகரிக்கப்பட்டால், ஏற்கனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 7 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?











Click it and Unblock the Notifications