2ஜி வழக்கின் தீர்ப்பு என்ன?.. படித்துக் காட்டிய ஆ.ராசா.. அதிமுகவுடன் மறுபடியும் நேரடி மோதல்..!
சென்னை: 2ஜி மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது குறித்து திமுக துணை பொதுச் செயலாளர் ஆ ராசா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
2ஜி அலைக்கற்றை வழக்கு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பான விவாதம் கடந்த சில தினங்களாக ஆ ராசாவுக்கும், அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் இடையே விவாதம் நடைபெற்று வருகிறது.
2ஜி தொடர்பாக ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோவும் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் 2ஜி குறித்து விளக்கம் அளிக்க திமுக எம்பி ஆ ராசா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழக முதல்வர்
அப்போது அவர் தனது குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் விளக்கம் அளிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் தன் மீது தொடரப்பட்ட 2ஜி வழக்கின் தீர்ப்பில் நீதிபதிகள் என்ன குறிப்பிட்டிருந்தார்கள் என வாசித்து காட்டினார். அவர் கூறுகையில் மிக நேர்த்தியாக ஜோடிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை சிபிஐயால் நிரூபிக்க முடியவில்லை என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை
எந்த தயக்கமும் இல்லாமல் அனைவரையும் நீதிபதி விடுதலை செய்துள்ளார். 2 ஜி வழக்கில் கடைசி வரை யாருமே சாட்சியுடன் வரவில்லை என நீதிபதி குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பை எழுதி முடித்த நீதிபதி தனது ஆற்றாமையை சுமார் 5 பக்கங்களுக்கு எழுதியுள்ளார்.

ஷெல் கம்பெனி
இப்படி ஒரு ஊழலா? பல்வேறு ஷெல் கம்பெனிகளை உருவாக்கி, ஒன்றிலிருந்து பணத்தை மற்றொன்றுக்கு பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார் நீதிபதி. மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை மறந்து அவர்கள் அரசியலமைப்பு மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் ஊழலில் ஈடுபட்டிருப்பது பதவியேற்பின் போது அளித்த உறுதிமொழியை மீறுவதாகும்.

புனிதத்தன்மை
இது அரசியலமைப்பின் புனிதத்தன்மையை களங்கப்படுத்துவதாக உள்ளது. இப்படிப்பட்ட செயலானது நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றுமை, உயரிய கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, நமது மக்களாட்சித் தத்துவத்தின் அடித்தளமாக இருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்பட்ட மன்னிக்க முடியாத படுகொலையாகும் என ராசா தெரிவித்தார்.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங்












Click it and Unblock the Notifications