ஒன்றிய அரசு திருந்தும் என நினைக்கிறேன்.. திருந்தவில்லை என்றால் நாங்கள் திருத்துவோம் -ஆ.ராசா
சென்னை: ஒன்றிய அரசு இனி மேல் தனது தவறை உணர்ந்து திருந்தும் என நம்புவதாகவும் இல்லையென்றால் திருத்தப்படும் எனவும் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் முயற்சியால் ஒன்றிய அரசுக்கு எதிராக இன்று தொடங்கியுள்ள எதிர்க்கட்சிகள் போராட்டம் நாடு முழுவதும் வரும் 30-ம் தேதி வரை தொடரவுள்ளது.
இதனிடையே வரும் 27-ம் தேதியன்று கம்யூனிஸ்ட் கட்சி வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருப்புக்கொடி
ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன. சென்னையில் அண்ணா அறிவாலயம், திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகம், கருணாநிதியின் கோபாலபுரம் வீடு, கனிமொழியின் சி.ஐ.டி.காலனி இல்லம் ஆகிய 4 இடங்களில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்
இதில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா தலைமை தாங்கினார். அவருடன் அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.ஆகியோர் பங்கேற்றனர். ஒன்றிய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்ட வாசகங்களை ஆ.ராசாவே படித்து உரக்க குரல் எழுப்பினார்.

திருத்துவோம்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒன்றிய அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்தும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம், போராட்டத்தை பார்த்தாவது திருந்தும் என நம்புவதாகவும் கூறினார். ஒரு வேளை மத்திய அரசு தனது நடவடிக்கைகளை திருத்திக்கொள்ளாவிட்டால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதை திருத்துவார் என ஆ.ராசா தெரிவித்தார்.

குற்றச்சாட்டு
தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது, விவசாயிகளின் போராட்டத்துக்கு மதிப்பளித்து 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொருளாதார சரிவை சரிசெய்ய வேண்டும், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications