அன்று கற்கால குகை; இன்று சங்ககால உறைக்கிணறு - பட்டரைபெரும்புதூர் ஆச்சரியங்கள் பற்றி தெரியுமா?
சென்னை: தமிழர் நாகரிகத்தின் தாய்மடி என கீழடியைச் சொல்கிறார்கள். அங்கே அகழாய்வின் மூலம் எடுக்கப்பட்ட தொல்பொருள்களை இப்போது மிக அழகான அருங்காட்சியகம் கட்டி அதில் காட்சிப்படுத்தி இருக்கிறது தமிழக அரசு. அதனைச் சமீபத்தில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
எங்கே உள்ளது இந்தப் பட்டரைபெரும்புதூர்?

இப்போது அதனைத் தொடர்ந்து, சென்னை அருகே உள்ள பட்டரைபெரும்புதூரில் நடத்தப்பட்ட அகழாய்வில், ஆய்வாளர்கள் மிகப் பழமையான உறைக்கிணற்றைக் கண்டெடுத்துள்ளனர்.
இந்தப் பட்டரைபெரும்புதூர் கிராமம் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பழைய நாகரிகமாகக் கருதப்படும் கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பட்டரைபெரும்புதூர் கிராமமானது பல்லவர் ஆட்சிக் காலத்தில் பெருமூர் என அழைக்கப்பட்டது.
இங்கே ஆதி காலத்தில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் காணப்பட்டதால், தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை கடந்த 2015 முதல் 2018வரை அகழாய்வை மேற்கொண்டது.
ஆனால், இந்த அகழ்வாராய்ச்சி கடந்த 2018க்குப் பிறகு அடுத்தகட்ட பாய்ச்சலை எட்டவில்லை. முறையாக நிதி வழங்கப்படாததால் முடங்கிப் போனது பட்டரைபெரும்புதூர் அகழ்வாராய்ச்சி. இந்த அளவுக்குத் தமிழர்களின் வரலாற்றைப் பறைசாற்றும் சான்றுகள் கிடைத்த களத்தை அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.
ஆகவே இப்பணிகளைத் திரும்ப மேற்கொள்ளவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். அவர் உடனடியாக இப்பணிகளை மேற்கொள்ள உரிய 30 லட்சம் நிதியை அளித்து பணிகளை முடக்கிவிட்டார்.
தமிழர்களின் வரலாற்று எச்சங்களை அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சி செய்து அதனை உலக மக்களின் முன் கொண்டுசேர்க்க வேண்டும் என்று ஸ்டாலின் தலைமையிலான அரசு பலவழிகளில் முனைப்புக் காட்டி வருகிறது.

வழக்கமாகத் தமிழக ஆட்சியாளர்கள் தொல்லியல் துறையை ஒரு பாழடைந்த பகுதியாகவே பார்ப்பது வழக்கம். ஆனால், அது புத்துணர்ச்சி பெற்று புதிய சாதனையை இந்த ஆட்சிக்காலத்தில் செய்யத் தொடங்கியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் முயற்சியால் மூன்றாம் கட்ட ஆய்வு பட்டரைபெரும்புதூரில் சமீபத்தில் தொடங்கப்பட்டது. அதன் பயனாக இப்போது 27 அடி உறைக்கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட அகழாய்வில் இதைப்போன்ற ஒரு உறைக்கிணறு கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது செய்தியாகும்.
கற்காலம் முதல் சங்ககாலம் வரையான ஆச்சரியங்கள்?
அந்த ஆய்வின் தொடர்ச்சியாக இப்போது கற்காலம் முதல் சங்ககாலம் வரையான பல பொருட்கள் கிடைத்துள்ளன. குறிப்பாகத் தமிழக தொல்லியல் அகழாய்வு வரலாற்றில் இதுவரைக் கிடைத்திராத சங்ககாலத்தைச் சேர்ந்த உறைக்கிணறு ஒன்று கிடைத்துள்ளது.
இந்த உறைக்கிணறு செங்கற்களால் கட்டப்பட்ட வட்டவடிவில் கட்டப்பட்டுள்ளது என்பது ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சுமார் 3.91 மீட்டர் வரிகளைக் கொண்ட, இக்கிணறு சரிவாக வடிவக் கோணத்தில் 56 வரிகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
மேலும் சுடுமணாலால் செய்யப்பட்ட இரண்டு உறைக்கிணறுகளும் 28 கூம்புகளைக் கொண்ட சுடுமண் ஜாடிகளும் அதிகமாகக் கிடைத்துள்ளன. ஏறக்குறைய 12 ஜாடிகள் ஒரே கிடைமட்டத்தில் மண்ணுக்குள் அடுக்கிவைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவைத் தவிர தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 14 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இதைப்போன்று கற்கருவிகள், இரும்புக் கருவிகள், கண்ணாடி மணிகள், அரிய கற்களில் செய்யப்பட்ட மணிகள் எனப் பல தொல்பொருட்கள் இந்த அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுத்துள்ளனர்.
இங்குக் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள்கள் எல்லாம், இங்கே சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் தொல் எச்சங்களாக அமைந்துள்ளன. பண்டையக் கால இலக்கியங்கள் குறிப்பிடுவதைப் போல் தமிழ்ச் சமூகத்தின் சரித்திர சான்றுகளாக இவை காட்சியளிக்கின்றன.
இங்குக் கிடைத்துள்ள தொல்லியல் பொருட்கள் அனைத்தும் அந்தக் காலகட்டத்தில் தமிழர்களின் கல்வி அமைப்பு, சமூக அமைப்பு, பொருளாதார கட்டமைப்பை எடுத்துக் காட்டும்படியாக உள்ளன என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
முடங்கிய ஆய்வை மீட்டுக் கொடுத்த ஸ்டாலின்?

ஆகவே, இங்கே இத்தனை வரலாற்றுச் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், கீழடியைப்போன்று பட்டரைபெரும்புதூர் பகுதியிலும் ஒரு அருங்காட்சியகம் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் முன்வைக்கிறார்கள் இப்பகுதி கிராமத்தினர்.
"கீழடிக்கு முன்பே எங்கள் கிராமத்தில் அகழாய்வை அரசு நடத்தியது. ஆனால் 2018க்குப் பின் அந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறவில்லை. முதல்வராக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால்தான் இப்போது வரலாற்றுச் சிறப்பு மிக்க உறைக்கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்கிறார் ஊர்க்காரர் ஒருவர்
"இந்த அகழ்வாராய்ச்சி வேலைகள் மீண்டும் தொடங்கியதால்தான் இந்த ஊர் மக்களில் சுமார் 25 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைத்துள்ளது. இது ஒரு நல்ல முயற்சி. இங்குக் கிடைத்துள்ள பொருள்களை இதே ஊரில் வைத்து அருங்காட்சியகம் கட்டினால், அதன் மூலம் ஒரு வருவாய் இந்த ஊருக்குக் கிடைக்கும். ஊரும் வெளியே தெரியவரும். எங்கள் பழம் பாரம்பரியமும் பேசப்படும்" என்கிறார் இங்கே பணி செய்யும் ஒரு பெண்மணி

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ.ப இது குறித்துப் பேசும்போது, "இதற்கு முன்பாக நடைபெற்ற அகழ்வாய்வில் பல்வேறு பொருள்கள் கிடைத்துள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை சங்ககாலத்தைச் சேர்ந்த ஒரு கிணற்றைக் கண்டுபிடித்துள்ளோம். இந்தளவு பெரிய கிணற்றைத் தமிழ்நாட்டில் இதுவரை நாம் கண்டுபிடித்ததே இல்லை. இது தொல்லியல்துறை வரலாற்றில் ஒரு சாதனை.
நம் நாகரிகத்தை நிரூபிக்க இது தக்க சான்று. இவைப் போக வரும்காலங்களில் இன்னும் பல வரலாற்றுச் சான்றுகள் கிடைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டுத் தொல்லியல் வரலாற்றில் இந்தப் பட்டரைபெரும்புதூர் மிகச் சிறந்த தலமாக அமையும்" என்கிறார்
வருங்கால அதிசயம் பட்டரைபெரும்புதூர்?
தமிழ் அடையாளம் என்பதை வெறும் ஏட்டில் மட்டும் எழுதி வைத்துப் பாடமாகப் படித்தால் மட்டும் போதாது. அதற்கான சான்றாதாரங்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அதை அறிவியல்ரீதியாக உலக அரங்கில் நிரூபிக்கவேண்டும். அதைச் செய்வது ஒரு அரசின் வேலை. அந்த வேலையை ஒரு கடமையாகத் தொடக்கம் முதலே செய்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
முதலில், இடைவிடாமல் கீழடியில் அகழாய்வு நடைபெறத் தொடர்ந்து எதிர்க்கட்சியாக இருந்தபோதும் குரல் எழுப்பி வந்தார் ஸ்டாலின். ஆட்சிக்கு வந்ததும் பூம்புகாரைக் கடல் அடியில் ஆய்வு செய்தார்.
அதன்பின் கொற்கை நகரத்தின் எச்சங்களைத் தேட உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக இப்போது பட்டரைபெரும்புதூரை தமிழர் பண்பாட்டின் பட்டியல் இடம்பிடிக்க வைத்திருக்கிறார்.

கடந்த 2018ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குடியம் பகுதியில்தான் ஆதி மனிதர்களின் கற்கால குகை வீடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனை அறிந்த சர்வதேச ஆய்வாளர்கள் ஆதிமனிதர்கள் அதிரம்பாக்கத்தில் வாழ்ந்ததாகச் சான்றுகளை வெளியிட்டனர்.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் அதிரம்பாக்கம், பட்டரைபெரும்புதூர் பகுதிகளில் தமிழக அரசு அகழாய்வுப் பணிகளைக் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இந்த அகழாய்வுகளில் இதுவரை 351 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்












Click it and Unblock the Notifications