+2 மார்க் தேவையே இல்ல? கொட்டிக் கிடக்கும் 80 படிப்புகள்! நெடுஞ்செழியன் தரும் ஆலோசனை
சென்னை: +2 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் யாரும் கவலைப் படவேண்டாம் என்றும் அவர்கள் வேறு தேர்வுகளை எழுதி உயர்கல்வியைப் பெறலாம் என்றும் கல்வியாளர் நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு +2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் தமிழ்நாட்டிலுள்ள 2478 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அதைப்போல் இந்த ஆண்டு 7.72 லட்சம் பேர் ப்ளஸ் 2 தேர்வு எழுதினர். அதில், 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் தகவல் வெளியானது.
மாநில அளவில் மாணவர்கள் 3,25,305 பேர் இந்த ப்ளஸ் 2 தேர்வை எழுதினர். அதைப்போல் 3,93,890 மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்வு எழுதி இருந்தார்.
இதில் மாணவர்கள் 92.37 சதவீதமும் மாணவிகள் 96.44 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் ஒட்டு மொத்தமாக 94.56 சதவீதம் பேர் மாநில அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு 4.07 சதவீதம் மாணவியர் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவரும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில் +2 தேர்வில் தோல்வி அடைந்து விட்டோம் என்பதற்காக யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்று கல்வியாளர் நெடுஞ்செழியன் ஆலோசனை வழங்கி உள்ளார்.
தோல்வி அடைந்த மாணவர்கள் வேறு படிப்புகளைத் தேர்வு செய்து சாதிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன், “பலர் இந்தத் தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள். சிலர் தோல்வி அடைந்திருக்கலாம். அதற்காக வருந்த வேண்டாம்.
உடனடியாக வரும் தேர்வை எழுதி நீங்கள், பிடித்தமான பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கலாம். அதற்கு அரசு பல வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.

ஆகவே, தோல்வியை ஒரு சுமையாகக் கருத வேண்டாம். அது வெற்றிக்கான படிக்கட்டு.
ப்ளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம் என்று குழப்பம் இருக்கலாம். நம் நாட்டில் ப்ளஸ் 2வுக்கு பிறகு 80 விதமான நுழைவுத் தேர்வுகளை அரசே நடத்துகிறது. அந்த நுழைவுத்தேர்வுகளில் ப்ளஸ் 2 மார்க் என்னவென்றே பார்க்க மாட்டார்கள்.
அந்தப் படிப்புகளுக்கான தேர்வுகளை எழுத நீங்கள் தயாராக இருக்க வேண்டும். எந்தப் படிப்பையும் படிக்கத் தயாராக இருக்க வேண்டும். இதைத்தான் படிப்பேன் என்று முடிவு செய்து முடங்கிப் போய்விடக் கூடாது.
இன்றைக்குப் பல்வேறு விதமான புதிய புதிய படிப்புகள் வந்துள்ளன. அதற்காக ஆலோசனையை முறையாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எதில் சிறப்பாக இருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடித்து, அதற்கு ஏற்ப கவனத்தைச் செலுத்துங்கள்.

நான் மாணவர்களுக்கு வழங்கும் முதல் அறிவுரை என்னவென்றால், நம் வீட்டுப் பொருளாதார நிலை எப்படி உள்ளது என்பதை அறிந்து, அதற்காகப் படிப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது மிகமிக முக்கியம்.
ஆகவே, உங்கள் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கான வழிகாட்டும் முகாம் நடத்தப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகின்றது. ஆகவே அங்கே சென்று முறையான ஆலோசனைப் பெற்று உங்களுக்குத் தேவையான படிப்பைத் தேர்ந்தெடுங்கள்.
பலரும் உடனடியாக பொறியியல் படிப்புக்குப் போய்விடுகிறார்கள். அதைத்தாண்டிப் பல நல்ல படிப்புகள் இந்தியாவில் உள்ளன. பொறியியலில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மட்டும் இந்தியாவில் 10.75 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள்.
ஆனால், Metrology துறையில் இந்திய அளவில் வெறும் 5 ஆயிரம் பேர்தான் படிக்கிறார்கள். ஆகவே மாணவர்கள் துறைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
லட்சக்கணக்கான மாணவர்களுடன் போட்டியிடுவதை விட, ஆயிரக்கணக்கான மாணவர்கள் மட்டுமே படிக்கக் கூடிய படிப்பைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அதில் அதிக போட்டிகள் இருக்காது. படித்து முடித்த பின் உடனடியாக வாய்ப்புகள் கிடைக்கும்.
ஒரு கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் போது, அங்கே எந்தளவுக்கு அதற்கான பேராசிரியர்கள் உள்ளனர்? அவர்களின் தரம் எப்படி? கல்விக்கான பாடத்திட்டம் எப்படி? இதற்கு முன்னால் படித்த மாணவர்களுக்கு வாய்ப்புகள் எப்படி இருந்தன? என்பதைப் பற்றி எல்லாம் ஆராய்ந்து பார்த்த பிறகுதான் கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும்.
யாரோ சொல்கிறார்கள் என்பதற்காகக் கண்ணை மூடிக்கொடு போய் விழக்கூடாது. அது எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாகிவிடும்” என்று எச்சரிக்கை செய்கிறார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications