“பெரியார், அம்பேத்கர் முகம் பொறித்த தாலி.. விருந்தில் பீப் 65".. சுயமரியாதை திருமணம் செய்த தம்பதி
சென்னை: சென்னை பெரியார் திடலில் டாக்டர் தெய்வேந்திரன் என்பவரும் ஜெனிபர் என்ற நிஷா ஆகியோர் நேற்று சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். பெரியார், அம்பேத்கர் முகம் பொறித்த மோதிரம் அணிந்து அவர்கள் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை பெரியார் திடலில் டாக்டர் தெய்வேந்திரன் என்பவரும் ஜெனிபர் என்ற நிஷா ஆகியோர் நேற்று சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். இதுபற்றி டாக்டர் தெய்வேந்திரன் அளித்த பேட்டியில், "என் பெயர் தெய்வேந்திரன்.. எனக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை.. என் மனைவிக்கு சொந்த ஊர் ஊட்டி.. எங்க திருமண இணையேற்பு விழா, தோழர் அய்யா நல்லக்கண்ணு தலைமையிலும், திராவிட விடுதலைக்கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் மணி மற்றும் புரட்சி இயக்குனர் அறம் பட இயக்குனரான கோபி நயினார் தோழர் முன்னிலையில் எங்கள் திருமணம் முடிந்தது.

எங்கள் திருமணத்தின் சிறப்பு என்னவென்றால்,, புரட்சியாளர் அம்பேத்கருடைய பிறந்த நாளில், அய்யா பெரியாருடைய திடலில், தோழர் நல்லக்கண்ணு அய்யாவை வைத்து இந்த திருமணத்தை நடத்தி உள்ளோம்.. இது எங்கள் வாழ்க்கையில் கிடைத்த பெரிய பாக்கியம்.. இந்த திருமணத்தோட தனிச்சிறப்புகள் என்னவென்றால், நாங்கள் இரண்டு பேரும் வேறு வேறு சாதி மற்றும் வேறு வேறு மதத்தைச் சார்ந்தவர்கள்.. நாங்கள் சாதி மத மறுப்பு திருமணத்தைத்தான் நாங்கள் முன்னெடுத்து செய்திருக்கிறோம்.
நான் ஒரு அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவராக இருந்து கொண்டிருக்கிறேன்.. அடிமட்டத்தில் இருந்து படித்து மேலே வந்தவன் என்பதால், இதை விட்டுவிடக்கூடாது.. நம்ம திருமணத்திலும் ஒரு குறியீடாக வைத்தால் தான் முன்னெடுப்பாக இருக்கும் என்பதால் திருமணத்தை பண்ணியிருக்கோம்..

இந்த திருமணத்தோடு தனிச்சிறப்புகள் பார்த்தீர்கள் என்றால், பெரியார் திடலில் நடத்தியது, அம்பேத்கர் பிறந்த நாளில் நடத்தியது, அய்யா நல்லக்கண்ணு மற்றும் தோழர்கள் எல்லாம் கலந்து கொண்டது.. எங்கள் திருமணத்தின் மதிய விருந்தில் பீக் 65 (மாட்டுக்கறி) சேர்த்துள்ளோம். அசைவம் தான் மதிய உணவாக தந்தோம்... இதை தமிழ்நாட்டில் சிலர் வெறுக்கும் சூழலில் இதை பதிவு செய்ய வேண்டும் என்று பீப் உணவையும் நாங்கள் சேர்த்துள்ளோம்.
அதுமட்டுமின்றி பறை இசையை துக்க நிகழ்விலும், ஒதுக்கி வைப்பதுமாக பார்க்குற நம்முடைய சமூகத்தில் பறை இசை குழுவினரை வரவழைத்தோம்... எங்கள் திருமணத்தில்அவர்களை இசையை நாங்கள் பதிவு செய்தோம்.. இதுதான் சரியான இசை என்று நாங்கள் பதிவு செய்தோம்.. நாங்கள் திருமணத்தில் அணிவித்துக் கொண்ட மோதிரத்தில் எனக்கு அவர்கள் அம்பேத்கர் முகம் பொறித்த மோதிரத்தை அணிவிப்பது போலவும், அவருக்கு நான் பெரியார் மோதிரத்தை அணிவிப்பது போலவும் இருக்கும்.. எங்கள் தாலியில் அம்பேத்கர் பெரியார் புகைப்படம் இருக்கு.." இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications