பெரும் ட்விஸ்ட்.. அரசியலில் இணையும் தமிழ்நாட்டின் டாப் ஐபிஎஸ்.. அதுவும் அந்த கட்சியா? எல்லாம் மாறுதே
சென்னை: தமிழ்நாட்டின் மூத்த டிஜிபியான பிரஜ் கிஷோர் ரவி தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். பிரஜ் கிஷோர் ரவி பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவர் விரைவில் முக்கிய அரசியல் கட்சி ஒன்றில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்கள் பதவிகளை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளனர். பலர் ஓய்வு பெற்றதும் அரசியலுக்கு வந்துள்ளனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.

தமிழ்நாடு காங்கிரசின் மூத்த தலைவர் சசிகாந்த் செந்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். அதேபோல் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசியல் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார். இது போக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி முன்னாள் மத்திய அரசு அதிகாரி, சிபிஐ, ஐபி பிரிவுகளில் பணியாற்றியவர் ஆவார்.
இந்த நிலையில்தான் இன்னொரு அதிகாரி இதேபோல் அரசியலுக்கு வர முடிவு செய்துள்ளார். தமிழ்நாட்டின் மூத்த டிஜிபியான பிரஜ் கிஷோர் ரவி தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். பிரஜ் கிஷோர் ரவி பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
காங்கிரஸில் சேர்ந்து லோக்சபா தேர்தலில் தனது சொந்த ஊரான பீகாரில் இருந்து போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த டிஜிபியான பிரஜ் கிஷோர் ரவி சமீபத்தில்தான் டிஜிபி ரேங்க் பெற்றார். இவர் மின்சார துறையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்தார்.
இவர்தான் தானாக பதவியை ராஜினாமா செய்து அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். சமீபத்தில், கருணா சாகர், 1991-பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி மற்றும் பீகாரைச் சேர்ந்தவர், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) இல் சேர்ந்தார். தற்போது ஆர்ஜேடி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக உள்ள அவர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் மூத்த டிஜிபியான பிரஜ் கிஷோர் ரவி காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று கூறப்படுகிறது. வரப்போகிற லோக்சபா தேர்தலை முன்னிட்டு இந்தியக் காவல் சேவையின் (IPS) 1989-பேட்ச் அதிகாரியான இவர், ஓய்வுபெறுவதற்கு மூன்று மாத சேவை மீதமுள்ளவர். இருப்பினும் கூட அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அடுத்த மக்களவைத் தேர்தலில் தனது சொந்த ஊரான பீகாரிலிருந்து போட்டியிடுவார்.
காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமான இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக சேர உள்ளார். 34 ஆண்டுகளுக்கும் மேலான அவரது அரசு பணியில் ஐக்கிய நாடுகள் சபையில் போஸ்னியா மற்றும் ஹெர்சோகோவினாவுக்குச் சேவையாற்றியுள்ளார்.
அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையின் பதக்கத்தை இரண்டு முறை இவர் வென்றுள்ளார். அவர் மத்தியப் பிரதிநிதியாகச் சென்று மத்திய தொழில் பாதுகாப்புப் படையிலும் அதன்பின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிலும் பணியாற்றினார். பீகாரில் காங்கிரஸுடன் தொடர்புடைய சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தில் இருந்து வந்தவர்.
அப்போதில் இருந்து காங்கிரசுடன் இவர் நெருக்கமாக இருந்த இவர்.. தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அதிகார ரீதியாக இவர் மிகவும் நெருமையானவர், அரசியல் சார்பற்றவர் என்ற பெயர்களை பெற்றவர். இந்த நிலையில்.. களங்கம் இன்றி அதிகார பணியில் இருந்து ஓய்வு பெற்று அரசியலுக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.











Click it and Unblock the Notifications