பாஜகவில் சேருங்க.. டாப் திமுக அமைச்சருக்கு நெருக்கடி.. விரைவில் கைது நடவடிக்கை? பற்ற வைத்த புள்ளி
சென்னை: திமுகவை நேரடியாக பழிவாங்கும் விஷயத்தில் பாஜக இறங்கிவிட்டது. தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை கைது செய்ய தொடங்கிவிட்டனர். திமுகவிற்கு டெல்லி பிரஷர் கொடுக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
5வது நாளாக ஏ வ வேலுவிற்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் எ.வ வேலு இடங்களில் ஐந்தாவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு நடந்து வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பாக அவருக்கு சொந்தமான இடங்களில் ஐந்தாவது நாளாக ரெய்டு நடந்து வருகிறது.

லோக்சபா தேர்தல் வரை இப்படித்தான் திமுகவினர் மீது ரெய்டுகள் தொடரும் என்றே அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதோடு ரெய்டுகள் முடியாமல் இன்னும் சில மூத்த அமைச்சர்கள் ரெய்டுகளில் சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ரெய்டு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
சீனியர்களாக இருக்கும் 10 அமைச்சர்களைத்தான் டெல்லி டார்கெட் செய்கிறது. அப்படித்தான் செந்தில் பாலாஜியை டார்கெட் செய்தனர். தற்போது ஏவ வேலுவை டார்கெட் செய்கின்றனர். இடையில் பொன்முடியை டார்கெட் செய்தனர். இப்படி சீனியர்களாக இருக்கும் 10 பேரைத்தான் டார்கெட் செய்து வருகின்றனர். சீனியர்களாக இருக்கும் நபர்கள்தான் டெல்லியின் பொறியில் சிக்கி உள்ளனர். இவர்களை கைது கூட செய்ய வாய்ப்புகள் உள்ளன.
சீனியர்களை கைது செய்து மொத்தமாக கட்சியை முடக்கும் திட்டங்களில் இவர்கள் ஈடுபடலாம். அதனால் ஆட்சிக்கு கெட்ட பெயர் வரும். தேர்தல் நேரத்தில் பாஜக இந்த திட்டத்தை களமிறக்கலாம் என்று நினைக்கிறது.
பேட்டி: அதில், திமுகவை நேரடியாக பழிவாங்கும் விஷயத்தில் பாஜக இறங்கிவிட்டது. தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை கைது செய்ய தொடங்கிவிட்டனர். உதாரணமாக ஆம் ஆத்மி தலைவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. உடனே அவர் கைதாவார் என்று பாஜக எம்பி ஒருவர் சொல்கிறார். இங்கே அண்ணாமலை அதைத்தான் சொன்னார். செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவார் என்று கூறினார்.

அப்படி என்றால் அதற்கு என்ன அர்த்தம். அமலாக்கத்துறைக்கு பின் பாஜக இருக்கிறது என்றுதானே அர்த்தம் . செந்தில் பாலாஜியை பாஜகவில் சேர சொல்லி அமலாக்கத்துறை அழுத்தம் கொடுத்ததாக கபில் சிபல் கூட கோர்ட்டில் சொன்னாரே. அதை அமலாக்கத்துறை மறுத்தது ஒரு பக்கம் இருக்கட்டும். இதெல்லாம் நடக்கும் போது.. அமலாக்கத்துறை மீது சந்தேகம் வருவது இயல்பு தானே?
திமுகவிற்கு டெல்லி பிரஷர் கொடுக்கிறது. அதில் இருந்து எப்படி தப்பிப்பது, பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்று ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார். அதில் ஒரு ஐடியாதான் அமைச்சரவையை மாற்றுவது. தற்காலிமாக அமைச்சரவையை மாற்றலாம். 2024ல் கண்டிப்பாக ஆட்சி மாறும். அதுவரை இப்படி செய்யலாம் என்று ஸ்டாலின் இருக்கிறார். இதற்கான திட்டத்தில் அவர் இருப்பதாகவே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இருக்கின்றன.
தற்போது இருக்கும் அமைச்சர்களை கட்சி வேலைகளுக்கு அனுப்பி ஸ்டாலின் திட்டத்தில் உள்ளார். சீனியர் அமைச்சர்களை கட்சி வேலைக்கு அனுப்புவார். முக்கியமாக லோக்சபா தேர்தல் வருகிறது. உங்கள் மாவட்ட பணிகளை பாருங்கள். அந்த பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று சொல்லும் திட்டத்தில் இருக்கிறார். அடுத்து அமைச்சர் யார் கைதாவார் என்ற நிலை உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications