மாணவர்கள் எண்ணிக்கையை அதிகமாக காட்டி மோசடி! விபூதி அடித்த ஆசிரியர்கள்? அரசு எடுத்த அதிரடி முடிவு
சென்னை : அரசின் திட்டங்கள் மாணவர்களுக்கு முறையாக சேர்கிறதா? என ஆய்வு செய்ய குழு அமைத்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், காலை சிற்றுண்டி, எண்ணும் எழுத்தும் ,கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முறையாக சென்று சேர்கிறதா என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகிறது. அரசு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என சுமார் 20 ஆயிரம் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த காலங்களில் ஆஃப்லைனில் மாணவர்கள் கல்வி விவரங்கள் மற்றும் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது டிஜிட்டல் யுகம் என்பதால் மாணவர்களின் விவரங்கள் பெற்றோர்களின் விவரங்கள் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக பள்ளி கல்வித்துறை எமிஸ் எனும் இணையதளத்தையும் பராமரித்து வருகிறது. இந்த இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் மட்டுமல்லாது பெற்றோர்களின் விவரங்கள் கல்வித் தகுதி அரசின் நலத்திட்டங்கள் வருகை பதிவேடு உள்ளிட்டவையும் உடனுக்குடன் குறுஞ்செய்தியாக பெற்றோர்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த தகவல்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு சீருடை, உதவித் தொகை உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி மோசடியில் ஈடுபட்டது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல, விழுப்புரம் மாவட்டம், கோலியனூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியிலும் முறைகேடுகள் நடந்திருப்பதை கல்வித்துறை கண்டுபிடித்துள்ளது. அதாவது, முறைகேடாக மாணவர்களின் எண்ணிக்கையை பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசின் திட்டங்கள் மாணவர்களுக்கு முறையாக சேர்கிறதா? என ஆய்வு செய்ய குழு அமைத்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், காலை சிற்றுண்டி, எண்ணும் எழுத்தும் ,கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முறையாக சென்று சேர்கிறதா என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மேலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதா எனவும் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் மதிப்பெண்கள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்யவும், மாணவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா எனவும் கண்காணிக்கவும், ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த குழுவில் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஐஏஎஸ், இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் என 30 உயர் அதிகாரிகளை நியமித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரிக்கும் தனித்தனியாக மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சங்கர் ஐஏஎஸ், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆர்த்தி ஐஏஎஸ், மதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உமா, சென்னைக்கு தனியார் பள்ளி இயக்குனர் பழனிசாமி, கடலூருக்கு அரசு தேர்வு துறை இயக்குனர் லதா, ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை உறுப்பினர் உஷாராணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நாகராஜ முருகன், சேலம் நாமக்கல் மாவட்டத்திற்கு அரசு பாடநூல் துறை செயலாளர் குப்புசாமி, விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா, கோவை மற்றும் நீலகிரிக்கு கூடுதல் திட்ட இயக்குனர் உமா, திருவள்ளூர் மாவட்டத்திற்கு தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ், திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் சசிகலா, கரூர் மாவட்டத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் செல்வராஜ், கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டத்திற்கு இணை இயக்குனர் சுகன்யா, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இணை இயக்குனர் ஸ்ரீதேவி, பெரம்பலூர் அரியலூர் மாவட்டத்திற்கு இணை இயக்குனர் அமுதவல்லி, தேனி மாவட்டத்திற்கு இணை இயக்குனர் பொன்னையா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல், ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டத்திற்கு இணை இயக்குனர் குமார், திருச்சி மாவட்டத்திற்கு ராஜேந்திரன், திருப்பூர் மாவட்டத்திற்கு ஆனந்தி, விருதுநகர் மாவட்டத்திற்கு ஜெயக்குமார், ஈரோடு மாவட்டத்திற்கு ராமசாமி, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சாந்தி, வேலூர் மாவட்டத்திற்கு அய்யனார், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு ஞான கௌரி, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பூபதி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு கோபிதாஸ், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சுவாமிநாதன், தூத்துக்குடி மாவட்டத்திற்கு முனுசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா












Click it and Unblock the Notifications