ஆயிரம் டூ 5000 ரூபாயில் பயனாளிகளுக்கு சிக்ஸர்.. சொன்னதை செஞ்சாரு ஸ்டாலின்! கள நிலவரம் பாசிட்டிவ்?
சென்னை: தேர்தல் களத்தில் திமுகவின் பிரம்மாண்டமான துருப்புச் சீட்டாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உருவெடுத்துள்ளது..இந்த பெரும் நிதி உதவியால் பயனடைந்துள்ள கோடிக்கணக்கான பெண்களின் ஆதரவு வரவிருக்கும் தேர்தலில் திமுகவிற்கு வெற்றியைத் தரும் ஒரு முக்கிய வாக்கு வங்கியாக மாறும் என திமுக வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.. அது சாத்தியமா?
கடந்த 2021 தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2023 செப்டம்பர் 15 அன்று காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டது..

குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கும் பெண்களுக்கு அங்கீகாரம் அளிப்பதே இதன் நோக்கம்.. மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 12000 ரூபாய் நேரடியாக பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது..
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
இது வெறும் உதவித் தொகை அல்லாமல் பெண்களின் உழைப்புக்கு தரும் உரிமைத் தொகை என்று அழைக்கப்படுவதால் பயனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது..
ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50000 ரூபாய்க்கு கீழ் உள்ளவர்கள் 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ளவர்கள் இந்த திட்டத்தில் பயன் பெறுகின்றனர்..
இந்த திட்டத்தின் பலனை பெற வேண்டுமானால், வீட்டு மின்சார பயன்பாடு ஆண்டுக்கு 3600 யூனிட்டிற்குள் இருக்க வேண்டும்.. ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவர் மனைவியின் பெயர் இல்லாத பட்சத்தில் தகுதியுள்ள மற்றொரு பெண் குடும்பத் தலைவியாக தேர்வு செய்யப்படுகிறார்..
ஸ்டாலின் சொன்னதை செஞ்சாரு
தற்போது தேர்தல் சமயத்தில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான நிலுவை தொகை 3000 மற்றும் கோடை கால சிறப்பு தொகை 2000 என மொத்தம் 5000 ரூபாயை ஒரே தவணையாக முதல்வர் ஸ்டாலின் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், விரைவில் தேர்தல் வரஉள்ள நிலையில், திமுகவினர் இந்த திட்டத்தின் பலனை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.. சொன்னதை செய்வாரு ஸ்டாலின் என்ற தலைப்பில், இந்த திட்டம் தந்த தாக்கம், சாதனையை பட்டியலிட்டு வருகிறார்கள்.
அதில், "ஆரம்பத்தில் ஒரு கோடியே 12 லட்சம் பெண்களுடன் தொடங்கிய இந்த திட்டம் இன்று ஒரு கோடியே முப்பத்து ஒரு லட்சம் பெண்களாக விரிவடைந்துள்ளது..
பயனாளிகள் எண்ணிக்கை
நிதி ஒதுக்கீட்டை பொறுத்தவரை 2023 முதல் 2025 நவம்பர் வரை மொத்தம் 35 கோடி ரூபாய்க்கு மேல் அரசு ஒதுக்கியுள்ளது.. இதில் 30000 கோடி ரூபாய்க்கு மேல் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது..
கடந்த 2023ம் ஆண்டில் 1.13 கோடி பெண் பயனாளிகளும், 2024 1.20 கோடி பெண் பெண்களும், 2025ம் ஆண்டில் 1.30 கோடி பெண் பயனாளிகளும், நடப்பு 2026-ம் ஆண்டில் 1.31 கோடி பெண் பயனாளிகளும் இந்த திட்டத்தால் பலனடைந்துள்ளனர்.. சொன்னதை செஞ்சாரு ஸ்டாலின்" என்று பெருமிதத்துடன் லிஸ்ட்டினை இணையதளத்தில் பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.
கள நிலவரம் என்ன
இதை அரசியல் ரீதியாக பார்க்கும்போது இந்த திட்டம் திமுகவிற்கு மிகப்பெரிய வாக்கு வங்கியை உறுதி செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. விலைவாசி உயர்வு மற்றும் அன்றாட செலவுகளுக்கு திண்டாடும் சாமானிய பெண்களுக்கு இந்த 1000 ரூபாய் ஒரு பாதுகாப்பான உணர்வை தந்து வருகிறது..
குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்கு இந்த பணம் பேருதவியாக இருப்பதால் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்து பெண்கள் திமுக பக்கம் சாய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.. அதிலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற உழைக்கும் வர்க்க பெண்களின் ஆதரவு திமுகவிற்கு ஒரு நிலையான வாக்கு வங்கியாக மாற வாய்ப்பு உள்ளது..
பாசிட்டிவ் திமுகவுக்கு?
அதேமயம், எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தாலும் பயனாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால் தேர்தலிலும் இது திமுகவிற்கு சாதகமான பலனை தரும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.. பெண்களின் முடிவெடுக்கும் அதிகாரம் அதிகரித்துள்ளதால் இந்த உரிமைத் தொகை திட்டம் தேர்தலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும்..
இருப்பினும் இந்த திட்டத்தை முழு வெற்றி என்று சொல்ல முடியாது என எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.. தகுதி வரம்புகளால் தகுதியிருந்தும் விடுபட்ட லட்சக்கணக்கான பெண்களின் அதிருப்தி கள நிலவரப்படி திமுகவிற்கு ஒரு சவாலாக உள்ளது.. அனைவருக்கும் இல்லாதது ஏமாற்று வேலை என்று அதிமுக மற்றும் பாஜக விமர்சிக்கின்றன..
விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பெண்களின் மேல்முறையீடுகள் இன்னும் நிலுவையில் இருப்பது தேர்தலில் ஒரு எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.. மொத்தத்தில் இந்த திட்டம் மிகப்பெரிய சாதனையாக இருந்தாலும், விடுபட்ட பெண்களின் மனக்குறையை அரசு எப்படிக் கையாள்கிறது என்பதைப் பொறுத்தே இது முழுமையான வாக்குகளாக மாறும்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications