கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்!
சென்னை: மத்திய கிழக்கு நாடுகள் போர் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஈரான் ஹார்மோஸ் ஜலசந்தியை மூடிய நிலையில் அரபு நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாமல் மொத்தமாக முடங்கி உள்ளன. இப்படி ஒரு சூழ்நிலையை ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு குட்டி தேசம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு உள்ளது.
கிட்டத்தட்ட உலகின் சுவாசப்பையை ஒருவர் பிடித்து இறுக்கினால் எப்படி இருக்குமோ ஹார்மோஸ் ஜலசந்தியை மூடியது உலக நாடுகளை அந்த அளவிற்கு திணற வைத்து உள்ளது.

உலகின் பல நாடுகளுக்கு எரிவாயு வழங்கும் 'கேஸ் கிங்' கத்தார் மற்றும் கச்சா எண்ணெய்க்குப் பெயர்போன சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளுமே இப்போது திணறி வருகின்றன. இதற்கு முக்கியக் காரணம், ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz). இந்த கடல் வழிப்பாதை முடங்கியுள்ளதால், கத்தாரால் முழுத் திறனுடன் எரிவாயுவை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. சமீபகாலமாக 'ஜாபுரா' (Jafurah) திட்டத்தின் மூலம் எரிவாயு லாபத்தை ருசிக்கத் தொடங்கிய சவுதி அரேபியாவிற்கும் இப்போது எல்லா வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்காவில் ஒரு விஸ்வரூபம்!
கத்தாரையும் சவுதியையும் மலைபோல நம்பியிருந்த ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள், இப்போது மாற்று வழியைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த இக்கட்டான சூழலைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளத் துடிக்கிறது ஆப்பிரிக்க நாடான நைஜீரியா.
ஆப்பிரிக்காவிலேயே அதிக எரிவாயு இருப்பு கொண்ட நாடு நைஜீரியா தான். உலக அளவில் டாப் லிஸ்ட்டில் இருந்தாலும், போதிய முதலீடு இல்லாததால் இத்தனை காலம் நைஜீரியாவால் ஜொலிக்க முடியவில்லை. அந்தத் தடையை உடைக்கவே, சமீபத்தில் நைஜீரிய அரசுப் பிரதிநிதிகள் பிரிட்டனுக்குப் பறந்தனர். லண்டனில் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது.
$20 பில்லியன் மெகா பிளான்: மூன்று நாடுகள் வழியாக பைப்லைன்!
நைஜீரியாவின் திட்டம் சாதாரணமானதல்ல. சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஒரு பிரம்மாண்ட எரிவாயு குழாய் (Gas Pipeline) அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
வழித்தடம்: நைஜீரியாவில் தொடங்கி சாட் (Chad), லிபியா வழியாக சிசிலியை (Sicily) சென்றடையும்.
இலக்கு: ஆண்டுக்கு 30 பில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயுவை ஐரோப்பாவிற்கு நேரடியாகக் கடத்துவது.
பணம் இல்லாததால் மண்ணுக்குள் முடங்கிக் கிடக்கும் நைஜீரியாவின் எரிவாயு வெளிச்சத்திற்கு வந்தால், உலக எரிசக்தி சந்தையின் வரைபடமே மாறிவிடும். 'நெட் ஆயில்' (Net Oil) தலைமையிலான கூட்டமைப்பு இந்த மெகா திட்டத்தைச் செயல்படுத்த முனைப்புக் காட்டி வருகிறது. முதலீட்டாளர்களைக் கவர வரிச் சலுகைகளையும் அள்ளித் தரத் தயாராக இருக்கிறது நைஜீரிய அரசு.
ஆனால் இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் உடனடியாக நைஜீரியாவிற்கு பணம் தேவை. லண்டன் உடன் மேற்கொள்ளப்பட்டு உள்ள டீலிங் மூலமாக பணிகள் இப்போது தொடங்கும். ஆனால் பணிகள் அப்படி தொடங்கினாலும் உடனடியாக கேஸ் வருமா என்பது சந்தேகம். ஆனால் அடுத்த 3-4 வருடங்களில் நைஜீரியா பெரிய அளவில் பொருளாதார ரீதியாக இதனால் பலன் அடைந்து இருக்கும்.
பொதுவாக எண்ணெய் இருந்தால் அங்கே அமெரிக்கா இருக்கும் என்பார்கள்.. அந்த வகையில் ஆப்பிரிக்காவிலும் விரைவில் அமெரிக்கா தடம் பதிக்குமா என்பது அடுத்த சில ஆண்டுகளில் தெரிந்துவிடும்!












Click it and Unblock the Notifications