சென்னை வந்த இண்டிகோ விமானம்.. நடுவானில் ராணுவ வீரர் செயலால் பதற்றம்.. அலறிய பயணிகள்
சென்னை: டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீரென ராணுவ வீரர் ஒருவர் அவசர கால கதவை திறக்க முயன்றதால், பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதையடுத்து ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். விமானம் தரையிறங்கியதும் அவரை அழைத்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விமானத்தில் அவசர கால கதவை நடுவானில் திறப்பது, அதில் பயணிக்கும் அனைவருக்குமே ஆபத்தானது. குறும்புத்தனமாகவோ, விளையாட்டாகவோ, அவசர கால கதவை திறக்க சிலர் முற்படுகிறார்கள். அப்படி செய்பவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

விமானத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டால் பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்ற நோக்கில் அவசரகால கதவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதை தேவையற்ற சமயத்தில் திறந்தால் நிச்சயம் விமானத்தில் பயணிக்கும் அனைவருக்குமே பேராபத்தாக முடிந்துவிடும்.
இதனால் தான் அவசரகால வெளியேறும் கதவின் கைப்பிடியில் ஒரு கவர் அமைக்கப்பட்டிருக்கும். இந்த கவர் தான் கேபின் அழுத்தம் அல்லது வேறு ஏதேனும் தற்செயலான காரணங்களால் திறக்கப்படாமல் பாதுகாக்கிறது.ஆனால் அந்த கவரை யாராவது கட்டாயப்படுத்தி திறந்தால், கைப்பிடி மிக சாதாரண கண்ணாடி போல் இருக்கும். அப்படி இருந்தால் பேருந்தில் உள்ள ஜன்னல் கண்ணாடி போல் சர்வசாதாரணமாக திறக்க முடியும்.அதனால் தற்செயலாக கூட நடுவானில் திறக்கப்படும் அபாயம் உள்ளது. இப்படி நடந்தால் விமானத்திற்கு ஆபத்தானது. அதனால் தான் அவசரகால கதவின் கவர் திறக்க முடியாத வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
அதையாராவது வலுவாக வெளியே இழுக்க வேண்டும், அதற்கு பின்னர் தான் அவசர கால கதவை திறக்கவே முடியும். இதனிடையே அவசர வழிக்கு அருகில் இருக்கைகள் ஒதுக்கப்பட்ட பயணிகளுக்கு அவர்கள் எந்த காரணம் கொண்டும் அதனை திறக்க முயற்சிக்ககூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் அதையும் மீறித்தான் சில பயணிகள் திறக்க முயற்சிக்கிறார்கள். இது ஆபத்தை விளைவிக்கும் என்பதால் , மிக மோசமான நடத்தை விதிமீறலாக விமான நிறுவனங்களால் அறிவிக்கப்படுகிறது. அப்படி செய்பவர்கள் கண்டிப்பாக சிறையில் அடைக்கப்படுவார்கள்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் பயணி ஒருவர் திடீரென நடுவானில் அவசர கால கதவை திறக்க முயன்றுள்ளார். இதனை அறிந்த விமானத்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்து அலறி கூச்சலிட்டார்கள்.
இதுபற்றி அறிந்ததும் உடனடியாக ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தி எச்சரித்து அமர வைத்தனர். விமானம் சென்னையில் தரையிறங்கியதும், அந்த நபரை தனியாக அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.
இதில், அவர் தமிழகத்தின் செங்கம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் என்பதும் அவருடைய பெயர் மணிகண்டன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அந்த ராணுவ வீரரிடம் போலீசார் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பொதுவாக அவசர கால கதவை திறந்தால், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 336, மற்றவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பதைக் கையாளும் பிரிவு 22 மற்றும் விமானத்தின் பைலட்-இன்-கமாண்ட் அல்லது பணியாளர்கள் வழங்கிய சட்டப்பூர்வ அறிவுறுத்தலைப் பின்பற்ற மறுத்ததற்காக விமான விதிகளின் பிரிவு 22 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications