கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் ஒரே நாளில் நடந்த ஆச்சர்யம்.. சிஎம்டிஏ செயலால் பயணிகள் மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் பயணிகளின் வசதிக்காக 3 புதிய ஏடிஎம்களை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நிறுவி உள்ளது. அண்மையில் சர்ச்சை எழுந்த நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்ததுடன் உடனடியாக 3 கூடுதல் ஏடிஎம்களையும் நிறுவியிருக்கிறது சிஎம்டிஏ.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் திறந்து முதலே பல்வேறு குறைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் முன் வைத்து வருகின்றன.

A surprise happened at chennai kilambakkam bus stand in one day Passengers are happy

அப்படி தான் ஊடகங்களில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் கூடுதல் ஏடிஎம் மையங்கள் இல்லாததால் பயணிகள் அவதி அடைந்தாக செய்தி வெளியாகி இருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், உண்மை நிலை என்னவென்று நேற்று விளக்கம் அளித்தது.

இது குறித்து சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அறிக்கையில், " கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இரண்டு இடங்களில் மொத்தம் 10 ATM மையங்கள் அமைக்க ஏற்கனவே சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் அனுமதி வழங்கப்பட்டு, அதன் முதற்கட்டமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிட்டாச்சி ஆகியவை மூலம் ATM மையங்கள் அமைக்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

அவற்றுள் தற்போது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகிய இரண்டு வங்கிகளின் ATM மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, நடமாடும் ATM வாகன இயந்திரம் ஒன்று பேருந்து வளாகத்தில் பயணிகளின் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

இந்நிலையில், கனரா வங்கி ATM மையம் வரும் 24.05.2024. க்குள்ளும், ஹிட்டாச்சி நிறுவன ATM 25.05.2024-க்குள்ளும், ஐசிஐசிஐ வங்கி ATM 29.05.2024-க்குள்ளும் செயல்பாட்டிற்கு கொண்டுவர அவ்வங்கிகள் உறுதி அளித்துள்ளனர்.

எனவே இம்மாத இறுதிக்குள் ஐந்து ATM மையங்களும் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் நடவடிக்கை எடுத்து வருகிறது" இவ்வாறு அந்த அறிவிப்பில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஒரே நாளில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் சிஎம்டிஏ 3 புதிய ஏடிஎம்களை நிறுவி உள்ளது. இது தொடர்பாக சிஎம்டிஏ வெளியிட்ட அறிவிப்பில், "பயணிகளின் வசதிக்காக கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் (KCBT) மூன்று ATM மையங்கள் நிறுவப்பட்டுள்ளது. இதில் இரண்டு ஏடிஎம் மற்றும் ஒரு மொபைல் ஏடிஎம் ஆகியவை உள்ளன. ஏடிஎம் மெஷின்களின் இந்த அதிகரிப்பு காரணமாக பயணிகள் சிரமமின்றி பணத்தை எடுக்கலாம்.

A surprise happened at chennai kilambakkam bus stand in one day Passengers are happy

புதிதாக நிறுவப்பட்ட ஏடிஎம்கள் எப்போது முதல் செயல்பட போகின்றன

கனரா வங்கி: 24.5.24
ஹிட்டாச்சி: 25.5.24
ஐசிஐசிஐ: 29.5.24' இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+