சென்னையில் பதுங்கி இருந்த பயங்கரவாதி.. துப்பாக்கி முனையில் கைது! பரபரத்த விருகம்பாக்கம்!
சென்னை: சென்னையில் பதுங்கி இருந்த பயங்கரவாதி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அனோவர் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அன்வர் , அல் இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. சென்னையில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டபடி, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஹபிபுல்லா அளித்த தகவலின் பேரில் அன்வரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிரவாதி ஹபிபுல்லா மீது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கன்க்சா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநில போலீசார், சென்னை வந்து கோயம்பேடு போலீசார் உதவியுடன், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஓரு ஓட்டலில் இருந்து அன்வரை துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.
வங்கதேசத்தில் மத அடிப்படைவாத இயக்கங்களின் ஆதரவாளராகவும், பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராகவும் அன்வர் இருந்து வந்ததாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோத செயல்கள் தடுப்பு பிரிவில் அன்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் அவர் தங்கி இருந்த இடத்திலும் போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications