அண்ணாமலை திரும்பி வருவதற்குள்.. மொத்தமாக மாறிடும் போலயே.. அமித் ஷாவை பார்த்த புள்ளி.. பயங்கர பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக-பாஜக கூட்டணியை மீண்டும் உருவாக்கி விட வேண்டும் என்கிற பகீரத முயற்சியை எடுத்து வருகிறார் த.மா.க.தலைவர் ஜி.கே.வாசன். இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இரண்டு முறை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்.

அந்த பேச்சுவார்த்தையில், ''நீங்கள் முயற்சி எடுங்கள். அதிமுக ஓ.கே. எனில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை'' என்ற ரீதியில் வாசனிடம் அமித் ஷா சொல்லியிருக்கிறார். அப்போது, அண்ணாமலையின் எடப்பாடி எதிர்ப்புதான் பாஜகவுடனான அதிமுக கூட்டணிக்கு நெருடலாக இருக்கிறது என்பதை வாசன் சொன்ன போதும், ''அப்படிப்பட்ட யோசனை தவறானது. கூட்டணி என்பது தேசிய தலைமை முடிவு செய்வது. இதில் மாநில தலைவரின் (அண்ணாமலை) முடிவு என்று எதுவும் கிடையாது. தலைவர்ங்கிற முறையில் அவரது யோசனை மட்டுமே கேட்கப்படும்.

aiadmk edappadi palanisamy

மற்றபடி தேசிய தலைமையின் முடிவு தான் இறுதியானது. அதனால், மாநில தலைவரின் எதிர்ப்பினை வைத்து அதிமுக யோசிக்கக் கூடாது'' என்று அமித் ஷா சொல்லியிருக்கிறார். இந்த நிலையில், அமித்ஷாவுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய வாசன், எடப்பாடியை தொடர்புகொள்ள, பெரிய அளவில் அவர் ரியாக்‌ஷன் காட்டவில்லை.

இதனால் வாசனின் முயற்சி சற்று அமுங்கிப் போனது. இந்த சூழலில், அமித் ஷாவுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியிருக்கிறார். அதில் என்ன பேசப்பட்டது என உறுதியாக இன்னும் தகவல் கிடைக்கவில்லை. அதேசமயம், எடப்பாடியிடம் மீண்டும் பேசியிருக்கிறார் ஜி.கே.வாசன். அப்போது, ''பாஜக மாநில தலைவர் மாற்றம் நடந்தால் கூட்டணிக்கு ஓ.கே. வா? அண்ணாமலை மாற்றப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி வைக்க உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே'' என்று வாசன் கேட்க, ''பாஜகவுடன் 2026 தேர்தலிலும் கூட்டணி இல்லைன்னு நாங்கள் சொல்லி விட்டோம். அதனை இப்போதைய சூழலில் திரும்பபெற முடியாது வாசன்.

தேர்தல் நெருக்கத்தில் தான் கூட்டணி பற்றியெல்லாம் ஆலோசிக்க வேண்டும். அதுவரை கூட்டணி பற்றி எதையும் நாங்கள் முடிவு எடுக்கவில்லை. அந்த சமயத்தில் பார்த்துக் கொள்ளலாம்'' என்று அழுத்தமாக சொல்லிவிட்டாராம் எடப்பாடி. அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் வரவேண்டும் என வாசன் எதற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டும் ? என்று த.மா.கா. வட்டாரங்களில் விசாரித்தபோது, ''திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசையும் சிறுத்தைகளையும் தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர எடப்பாடி முடிவு செய்துவிட்டார்.

அதற்காக ரகசிய மூவ்கள் நிறைய நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், அதிமுக கூட்டணிக்குள் காங்கிரஸ் வந்து விட்டால், அதிமுக கூட்டணியில் த.மா.கா. வுக்கு இடம் இருக்காது. காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில் வாசனுக்கு இடமளிக்க கூடாது என்பதை காங்கிரஸ் வலியுறுத்தும். அதனால் காங்கிரஸ் அதிமுகவுக்கு வந்துவிடாமல் இருக்க வேண்டுமானால் அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் மலர வேண்டும். அதனால் தான் தலைவர் வாசன் இந்தளவுக்கு மெனக்கெடுறார்'' என்று த.மா.கா. நிர்வாகிகள் சொல்கின்றனர்.

ஸ்டாலினுக்கு போன தகவல்: இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் சில தகவல்கள் சென்றுள்ளதாம். அதன்படி, எடப்பாடி அமித் ஷா பேச்சு விரைவில் நடந்தாலும் நடக்கலாம்.. அண்ணாமலை இல்லாத இந்த சமயத்தில்.. கூட்டணி பேச்சுக்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று தகவல் சென்றுள்ளதாம்.

திமுக முகாமிலிருந்து எடப்பாடி பக்கம் தாவ பேசி கொண்டிருந்தவர்கள் முகத்தில் கரி பூசப்பட்டுவிட்டது. அவர்கள் அதிமுகவிடம் இணைய முடியாது. பாஜக கூட்டணி இருப்பதாக அதிமுக உடன் கூட்டணி வைக்க முடியாது. 2026ல் அதிமுக பாஜக மெகா கூட்டணி அமைக்க உள்ளது. பாஜக உள்ளதால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அந்த அதிமுக கூட்டணிக்கு செல்லாது என்று தகவல் சென்றுள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+