திருவல்லிக்கேணி அருகே முதியவர் மீது வேரோடு மரம் விழுந்து பலி.. நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சிகள்
சென்னை: சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் திருவல்லிக்கேணி - மெரினா விவேகானந்தர் மணிமண்டபம் செல்லும் சாலையில் முதியவர் ஒருவர் சாலையை கடக்கும் பொழுது மரம் சாய்ந்து விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக கடந்த இரு தினங்களாக மழை பெய்து வந்தது. புயல் கரையை கடந்த போது சென்னை உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்று வீசியது.
இதனால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டாக்டர் பெசன்ட் சாலையில் சூறைக் காற்று பலமாக வீசியது. அப்போது முதியவர் ஒருவர்அந்த மரத்தின் அருகே சாலையை கடந்தார்.

மருத்துவமனை
ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மரம் முதியவரின் மேல் விழுந்தது. இதனால் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் திருவல்லிக்கேணி - மெரினா விவேகானந்தர் மணிமண்டபம் செல்லும் அந்த பெசன்ட் சாலையில் பயணித்த வாகனஓட்டிகள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது அவர் உயிரிழந்தார்.

மீன் வியாபாரி
இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில் அந்த முதியவர் திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவை சேர்ந்த ராஜா (50) என்பதும் ,அவர் ஜாம்பவான் மீன் மார்க்கெட்டில் பணியாற்றுபவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
|
வீடியோ
இதனிடையே மரம் வேரோடு சாயும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாலையில் இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் சென்ற வண்ணம் இருந்தன. அப்போது ஒருவர் சாலையை கடந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர் மீது அங்கிருந்த மரம் வேரோடு சாய்ந்தது. இந்த வீடியோ பார்ப்பவர்களின் நெஞ்சை பதறடிக்கிறது.

பாதுகாப்பு
புயல் நேரத்தில் காற்று பலமாக வீசும், எனவே மக்கள் வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் மக்களின் பாதுகாபபு கருதி நேற்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications