சென்னை விமான நிலையத்தில் காரில் வந்த நபர்.. சுங்கச்சாவடியில் உணர்ச்சி வசப்பட்டு.. கடைசியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை சேர்ந்த சுனில்ராஜ் என்பவர் காரில் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்துவிட்டு வெளியே சென்று கொண்டு இருந்தார். அப்போது விமான நிலைய சுங்கச் சாவடியில் கார் பார்க்கிங் கட்டணம் செலுத்த நின்றிருந்தார். விமான நிலைய சுங்கச்சாவடி ஊழியர் காருக்கு எவ்வளவு கட்டணம் என்பதை கம்ப்யூட்டரில் பார்த்தபோது சர்வர் பழுது காரணமாக காட்டவில்லை. இதனால் சுனில்ராஜ் என்ன செய்தார் தெரியுமா? இந்த பதிவில் பார்ப்போம்.

ஒருவரின் சிறு கோபம் அவருக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்பதற்கு பல உதாரணங்களை பார்த்திருப்பீர்கள்.. பெட்ரோல் பங்கிற்கு போனால், நமக்கு முன்னாடி நிறைய வாகனங்கள் நிற்கும். நாம் கிட்டே போன போதுதான், முன்னால் உள்ள நபருக்கு கட்டணம் செலுத்துவதில் பிரச்சனை இருக்கும். இன்னொரு பக்கம் ஓட்டலில் சாப்பாடு வாங்க போனால், நமக்கு முன்பே நிறைய பேர் இருப்பார்கள். நமக்கு பிடித்த உணவு கடைசியாக வந்த நபருடன் காலியாகி இருக்கும். நமக்கு இல்லை என்று கூறிவிடுவார்கள்..

A twist at the end for the emotional man at the Chennai airport toll booth

நமக்கு மட்டுமே நடக்கும்

ஏடிஎம்மில் பணம் எடுக்க போனால், நமக்கும் முன்னாடி வந்த நபர் வரை பணம் வரும்.. நமக்கும் இல்லை என்று வரும்.. நாம் போகும் போது தான் சுங்கச்சாவடிகளில் நிறைய வாகனங்கள் முன்பு நிற்கும்.. நாம் கிட்டே போகும் போது தான் யுபிஐ வேலை செய்யாமல் போகும். கட்டணம் செலுத்தும் முறையே செயல்படாமல் பரிதவிக்க வைக்கும். இப்படி பல தவறுகள் எதார்த்தமாக நடக்கும்.. கடைசியாக சொன்ன சுங்க கட்டணம் பிரச்சனை சென்னை விமான நிலையத்தில் ஒருவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தை பொறுத்தவரை இந்தியாவின் நான்காவது பரபரப்பான விமான நிலையமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 400 முதல் 450 விமானங்கள் வந்து செல்கின்றன. சென்னை விமான நிலையத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிறுவனங்கள் சேவைகளை அளிக்கின்றன. இங்கு விமானம் ஏறுவோரின் வசதிக்காக பிரம்மாண்டமான மல்டி லெவல் கார் பார்க்கிங் வளாகம் இருக்கிறது. இங்கு கார்கள், இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள் இருக்கின்றன. பார்க்கிங் பகுதியில் சுமார் 1,500 வாகனங்களை சர்வ சாதாரணமாக நிறுத்த முடியும்.

சுங்க கட்டணம் எவ்வளவு

இங்கு இரு சக்கர வாகனங்களை நிறுத்த 30 நிமிடங்கள் வரை ₹20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 2 மணி நேரம் வரை ₹35 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் கார்களுக்கு 30 நிமிடங்கள் வரை ₹85 கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இரண்டு மணி நேரம் சுமார் ₹165 கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் வாகனங்கள் டெர்மினல் பகுதிக்கு வந்து செல்வதற்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

10 நிமிடம் தான் டைம்

இங்கு பயணிகளை ஏற்றிச் செல்ல அல்லது இறக்கி விட வரும் வாகனங்கள் 10 நிமிடத்திற்குள் விமான நிலைய வளாகத்திற்குள் நுழைந்து வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இங்கு கட்டணம் செலுத்தாமல் எந்த வாகனமும் கடந்து செல்ல முடியாது. சில நேரங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை கூட ஏற்படும்..

சர்வரில் பழுது

சென்னையை சேர்ந்த சுனில்ராஜ் என்பவர் காரில் விமான நிலையத்துக்கு வந்து விட்டு வெளியே சென்று கொண்டு இருந்தார். அப்போது விமான நிலைய சுங்கச் சாவடியில் கார் பார்க்கிங் கட்டணம் செலுத்த நின்றுள்ளார். விமான நிலைய சுங்கச்சாவடி ஊழியர் காருக்கு எவ்வளவு கட்டணம் என்பதை கம்ப்யூட்டரில் பார்த்தபோது சர்வர் பழுது காரணமாக காட்டவில்லை என கூறப்படுகிறது.

3000 அபராதம்

10 நிமிடங்களுக்கு மேல் காருடன் காத்திருந்த சுனில் ஆத்திரத்தில் தடுப்புகளை இடித்து தள்ளி விட்டு வெளியே செல்ல முயன்றார். சுங்கச்சாவடி ஊழியர்கள் காரை மறித்து நிறுத்தினர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டதில் இருதரப்பு மீதும் தவறுகள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் ரூ.3 ஆயிரம் அபராதம் செலுத்தி விட்டு சுனில்ராஜ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+