சென்னையில் மனைவி இல்லாத குறையை தீர்த்து வைத்த ஆசிரியை.. காதலனுக்கு இறுதியில் பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலு என்ற பாலன் பர்னிச்சர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இந்நிலையில் மனைவி பிரிந்து தனியாக வாழ்கிறார். மகனை மயிலாப்பூர் பள்ளியில் படிக்க வைத்துள்ளார். அங்கு ஆங்கில ஆசிரியையாக உள்ள மோனிகாவதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறி உள்ளது. ஒரு கட்டத்தில் நெருக்கமான காதல் கசந்துள்ளது. இதையடுத்து காதலனை கடத்திச்சென்று நண்பர்கள் மூலம் ஆசிரியை செய்த காரியம் ஆடிப்போக வைத்துள்ளது.

கணவனை பிரிந்து வாழும் மனைவி அல்லது மனைவியை பிரிந்து வாழும் கணவர் ஆகியோரை எளிதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவதை சிலர் வழக்கமாக வைத்துள்ளார்கள். பெண்கள் ஆசை வார்த்தை மற்றும் ஆறுதலில் மயங்கி வாழ்க்கையை தொலைக்கிறார்கள். ஆண்கள் சலனத்திலும், துணை வேண்டும் என்ற எண்ணத்திலும் பணம், நகை மட்டுமின்றி வாழ்க்கையில் சிக்கலில் சிக்குகிறார்கள். காதல் உறவு சரியாக அமைந்து திருமணமாக மாறினால் சிக்கல் இருப்பது இல்லை. மாறாக காதல் உறவு கசந்தால் பெரிய பிரச்சனையாக மாறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

A twist at the end for the mylapore teacher who kidnapped her boyfriend in Chennai

பர்னிச்சர் கடை பாலு

சென்னை ராயப்பேட்டையில் சொந்தமாக பர்னிச்சர் கடை வைத்திருக்கும் 40 வயதாகும் பாலு என்ற பாலன் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் காதலி தொடர்பாக புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறுகையில், " என்னுடைய மனைவி என்னையும் மகனையும் விட்டு பிரிந்து சென்றுவிட்டார். எனக்கு ஒரு மகன் உள்ளார். அவரை மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்க வைத்து வருகிறேன். எனது மகனை தினமும் பள்ளிக்கு நான்தான் அழைத்துச்சென்று வருகிறேன்..

ஆங்கில ஆசிரியை மீது காதல்

அவ்வாறு எனது மகனை பள்ளியில் விட்டுச்செல்கையில், அதே பள்ளியில் வேலை பார்க்கும் ஆங்கில ஆசிரியை மோனிகாவதி (27) எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவர் என்னோடு நெருக்கமாக பழகினார். எனது மனைவி இல்லாத குறையை தீர்த்துவைத்தார். எனது வீட்டிற்கும் அடிக்கடி வந்து தங்கி செல்வார். இந்தநிலையில் அவர், திடீரென்று வேலையைவிட்டு நின்றுவிட்டார். அத்துடன் என்னிடம் இருந்தும் அவர் பிரிந்துவிட்டார்.

அம்பத்தூரில் வேலை

ஆசிரியை வேலையை விட்டுவிட்டு அவர் அம்பத்தூரில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலைப்பார்த்து வருகிறார். அவரை நான் சந்திக்க சென்றபோது என்னை பார்க்க மறுத்தார். செல்போனிலும் என்னிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார். என்னை சந்திக்க வேண்டாம் என்றும் அவர் கூறிவிட்டார். நான், அவருக்கு 2 பவுன் தங்க சங்கிலியை பரிசாக கொடுத்திருந்தேன். ரூ.5 லட்சம் பணமும் அவருக்கு செலவழித்துள்ளேன்.

நகை பணம் பறிப்பு

அந்த நகையையும், பணத்தையும் திருப்பி தருமாறு நா கேட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது நண்பர்கள் 3 பேரை அனுப்பி என்னை கடத்தி சென்றார். அவர்கள் என்னை அடித்து உதைத்ததோடு கத்திமுனையில் மிரட்டி நான் அணிந்திருந்த தங்க சங்கிலியையும், செல்போனையும் பறித்துக்கொண்டார். ஆசிரியை மோனிகா மீதும் அவரது நண்பர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த ஆசிரியையிடம் இழந்த நகை-பணத்தை மீட்டுத்தர வேண்டும்" இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஆசிரியை மோனிகா கைது

இந்த சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் பர்னிச்சர் கடை நடத்தும் பாலு என்ற பாலனை கடத்தியதாக அ.தி.மு.க. பிரமுகர் கானா ஆறுமுகம் (42), புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த குமார் (40) மற்றும் நவீன்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆசிரியை மோனிகாவும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆசிரியையின் உறவினர்கள் புகார்

இதற்கிடையில் ஆசிரியையின் வாழ்க்கையை சீரழித்துவிட்டதாகவும், பாலு மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆசிரியையின் உறவினர்கள் ஏராளமானோர் நேற்று ராயப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து போராடினார்கள். இந்த சம்பவத்தால் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரியை சொல்வதில் உண்மை உள்ளதா, பர்னிச்சர் கடை பாலன் சொல்வதில் உண்மை உள்ளதா என்பது நீதிமன்ற விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+