Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பங்கு சந்தையில் பணம் போட்டவர்களும், தங்கத்தில் பணத்தை போட்டவர்களும்.. அடுத்தடுத்து நடந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பங்கு சந்தையில் பணம் போட்ட பலருக்கு அண்மை காலத்தில் பங்குகள் சரிவின் காரணமாக மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது. அதேநேரம் தங்கத்தில் பணம் போட்டவர்களுக்கு கடந்த சில மாதங்களில் மிகப்பெரிய லாபமும் கிடைத்திருந்தது.. நேற்று மட்டுமல்ல.. கடந்த சில மாதங்களாக தங்கத்தின விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்கத்தில் முதலீடு செய்த பலருக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. ஆனால் நல்ல லாபம் தந்து வந்த பங்குச்சந்தைகள், டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின்னர் பெரும் சரிவுகளை சந்தித்துள்ளன. எனினும் இந்த சரிவு தற்காலிகமானது என்றே சொல்கிறார்கள்..

தங்கம் விலை ஒரு சவரன் 65000 ரூபாயை தாண்டி உள்ளது. ஒரு கிராம் 8000 ரூபாயை தாண்டி பல நாட்கள் ஆகிவிட்டது. கடந்த ஓராண்டில் ஒப்பிடும் போது தங்கம் விலை கிட்டத்தட்ட சவரனுக்கு 19 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு சவரன் தங்கம் 46320 ரூபாய் ஆக இருந்தது. அதன்பிறகு தான் தாறுமாறாக உயர தொடங்கியது. தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மற்றும் தங்க நகை வாங்கி குவித்தவர்கள் இப்போது மகிழ்ச்சியாக உள்ளனர்.

gold stock market

அதேநேரம் நீண்ட கால அடிப்படையில் பங்குச் சந்தையில் பங்கு வாங்கியவர்களுக்கு கடந்த சில மாதங்களாக நிலைமை சரியில்லை.. குறிப்பாக டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற பின்னர், அரசியல் மற்றும பொருளாதார நிலையற்ற தன்மை அதிகரித்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க விரும்பிய பல முதலீட்டாளர்கள், பங்குச்சந்தையில்இருந்து விலகி தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினார்கள். இதுதான் தங்கத்தின் விலை உயர காரணமாக அமைந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து, உலக நாடுகளுடன் வர்த்தக போர், கிரீன்லாந்தை இணைப்பதை நோக்கமாகக் கொண்டு வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவரது வழக்கத்திற்கு மாறான ராஜதந்திர அணுகுமுறைகள், கனடா உடனான முரண்பாடுகள் போன்ற கொள்கைகள் தான் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர காரணமாக இருந்தது என்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள்.

அதேபோல் ஐரோப்பாவில் பட்டியலிடப்பட்ட பரிவர்த்தனை-வர்த்தக நிதிகளில் தங்க இருப்பு, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 46.7 மெட்ரிக் டன்கள் அதிகரித்தது. தற்போது 3.6% அதிகரித்து, 1,334.3 டன்களாக உயர்ந்துள்ளது. இது 2021-2024 காலகட்டத்திற்கு மிகப்பெரிய மாற்றம் என்று உலக தங்க கவுன்சில் (WGC) தெரிவித்துள்ளது.

மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் பலர், பங்குச் சந்தை அச்சுறுத்தல் தங்கத்தை மீண்டும் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்று சாக்ஸோ வங்கியின் மூத்த அதிகாரியான ஓலே ஹேன்சன் கூறினார். கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ரிசர்வ் வங்கி வட்டி அதிகம் தந்ததால், தங்கத்தை விட்டுவிட்டு சந்தையில் முதலீடு செய்தார்கள்.. இப்போது மீண்டும் சந்தையில் ஏற்படும் வீழ்ச்சியால் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளார்கள் எனறும் ஓலே ஹேன்சன் கூறினார். அதேநேரம் தங்கத்தின் தேவை அமெரிக்காவில் அதிகரித்துள்ளதாகவும், வட அமெரிக்கா பகுதிகளில் தங்கத்தின் முதலீடு அதிகரிப்பும் தங்கத்தின் விலை உயர காரணம் என்கிறார்கள் பங்கு சந்தை நிபுணர்கள்.

பங்கு சந்தையில் ஏற்படும் பெரும் இழப்புகள் பெரும்பாலும் தங்கத்தின் லாபமாக மாறி வருவதாகவும் சொல்கிறார்கள். அதை உறுதி செய்யும் வகையில் நேற்று தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்தது. அதன்படி தங்கம் விலை சவரன் நேற்று 66000 ரூபாய்க்கு விற்பனையானது. அதேநேரம் பங்குச்சந்தைகள் நேற்று முன்தினம் ஒரே நாளில் பெரும் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக பலருக்கும் நஷ்டம் ஏற்பட்டது. அதேநேரம் நீண்ட கால அடிப்படையில் பங்குகள் வாங்கி வைத்துள்ளவர்களுக்கு மீண்டும் லாபம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இந்த சரிவு தற்காலிகமானது என்றே கூறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+