சென்னையில் ஓடிப்போய் லவ் மேரேஜ்.. பிறந்த குழந்தையை வேறு பெண்ணிடம் கொடுத்துவிட்டு தலைமறைவு.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதலால் காதல் செய்வீர் படம் பாணியில் பெற்றோர் எதிர்ப்பை மீறி, சென்னை கொளத்தூரை சேர்ந்த ஒரு இளைஞரும், செங்குன்றத்தை சேர்ந்த இளம் பெண்ணும் காதல் திருமணம் செய்துள்ளார்கள். இந்த தம்பதி செங்குன்றத்தில் தனியாக குடித்தனமும் நடத்தி உள்ளார்கள். இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை வளர்க்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பிறந்து 21 நாளே ஆன குழந்தையை வேறு ஒரு பெண்ணிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தலைமறைவாகி விட்டார்கள்..

இன்றைக்கு 2 கே கிட்ஸ்களில் சிலரது காதல் ஜாலியாக சுற்றுவது, உல்லாசமாக வாழ்வது, இறுதியில் பிரிந்துவிடுவது என்றாக உள்ளது. பணம் உள்ளவரையும், எதார்த்தம் புரியும் வரையிலும் ஒன்றாக ஜாலியாக இருக்கிறார்கள். கஷ்டம் வந்த உடன் ஈஸியாக பிரிந்து சென்று இன்னொருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தான் பாவம்.. சரியான கவனிப்பு, பாசம், அரவணைப்பு கிடைக்காமல் தவிக்கிறார்கள். இதை புரிய வைக்கும் வகையில் தான் ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. அதை எதிரொலிக்கும் வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதுவும் சென்னையில் நடந்துள்ளது. அதுபற்றி பார்ப்போம்.

Chennai love marriage

சென்னை கொளத்தூரை சேர்ந்த ராஜாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது, செங்குன்றத்தை சேர்ந்த மீனாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறதுது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இவர்களின் காதலுக்கு இருவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்,. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். பின்னர் ராஜாவும் மீனாவும் செங்குன்றத்தில் தனியாக குடித்தனம் நடத்தி வந்தனர். இதற்கிடையில் இளம்பெண் மீனா கர்ப்பமானார். 21 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் ராஜா மீனா தம்பதியை இருவரது வீட்டிலும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. அவர்களை உடனிருந்து கவனித்து கொள்ள பெரியவர்கள் யாரும் இல்லாததால் தம்பதியால் குழந்தையை வளர்க்க முடியாமல் தவித்து வந்துள்ளார்கள். அந்த இளம்பெண் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே மருத்துவமனையில் தனது தங்கையை பிரசவத்துக்காக அனுமதித்து இருந்த பெண்ணுடன் ராஜா மீனா தம்பதிக்கு பழக்கம் ஏற்பட்டு இருந்தது.

இதனால் தனது குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுத்து பார்த்த கொள்ளும்படி கூறிய மீனா, இதோ வருகிறேன் என்று கூறிவிட்டு குழந்தையை வாங்க அவர் திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த அந்த பெண், வாலிபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அவர் செல்போனை எடுக்கவில்லை. அவரது வீடு எங்கு உள்ளது என்பதும் தெரியாததால் வேறு வழியின்றி குழந்தையை வளர்த்து வந்திருக்கிறார்.

இதற்கிடையில் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அந்த பெண் சேர்த்தார். அவரிடம் குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்திருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். பின்னர் மருத்துவமனையில் கொடுக்கப்பட்டிருந்த ஆதார் அட்டை மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் தான் மேற்கண்ட விவரங்கள் போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து செங்குன்றத்தில் வசித்து வந்த தம்பதியை அழைத்து எச்சரித்த போலீசார், குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தார்கள். மேலும் அவர்கள் இருவரது பெற்றோரையும் அழைத்து சமரசம் செய்து வைத்த போலீசார், குழந்தை உள்பட 3 பேரையும் கவனித்து கொள்ளும்படி பெற்றோரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அவர்களுடன் அனுப்பிவைத்தனர். பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்வோருக்கு இந்த சம்பவம் பாடமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+