Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாலியான 53 குட்டிக் கதைகள்.. 10 கோடி செலவில் வந்தாச்சு ‘வாசிப்பு இயக்கம்’.. குஷியான குழந்தைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த 'திராவிட மாடல்' ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை பல அதிரடி மாற்றங்களைப் பெற்றுவருகிறது. குறிப்பாக, பாடப் புத்தகங்களைத் தாண்டி பள்ளிக் குழந்தைகள் படைப்புத்திறனிலும் ஆற்றல் மிக்கவர்களாக மாற்ற வேண்டும் எனப் பல புதிய திட்டங்களைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக இப்போது பள்ளிக் குழந்தைகளிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்துவதற்காக 'மாபெரும் வாசிப்பு இயக்க'த்தை பள்ளிக்கல்வித் துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கிவைத்திருக்கிறார்.

 A Vaasippu Iyakkam scheme has been launched in tamil nadu government schools

இந்தப் புதிய திட்டம் குறித்து அமைச்சர் விழாவில் பேசிய அன்பில் மகேஷ், "இன்று கதை கேட்கின்ற குழந்தைகள்தான் நாளை கதைசொல்லிகளாக, எழுத்தாளர்களாக மாறுவார்கள். பாடப் புத்தகங்களைத் தாண்டி வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும்போது குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க முடியும்.

தட்டுத் தடுமாறிப் படிக்கின்ற குழந்தைகளுக்கும், எழுதப் படிக்கத் தெரியாத பெற்றோர்களுக்கும் இந்த 'வாசிப்பு இயக்கம்' ஏதுவாக அமையும்" என்றார்.

 A Vaasippu Iyakkam scheme has been launched in tamil nadu government schools

மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, 'புத்தகத்தில் உலகைப் படிப்போம்! உலகத்தைப் புத்தகமாய் படிப்போம்!' என்றார். அவரது நூற்றாண்டு விழாவில் "மாபெரும் வாசிப்பு இயக்கம்" தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக மகிழ்ச்சி அடைகின்றோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

 A Vaasippu Iyakkam scheme has been launched in tamil nadu government schools

இன்று துறையூர் தொகுதியில் உள்ள பொன்னுசங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், இந்த இயக்கத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார். அதற்கான இலச்சினையையும், அச்சடிக்கப்பட்ட கதைப் புத்தகங்களையும் அவர் வெளியிட்டார்.

 A Vaasippu Iyakkam scheme has been launched in tamil nadu government schools

மாணவர்கள் வாசிப்பதற்காகக் கதைகள் மற்றும் கட்டுரைகள், பாடல்கள் என வெவ்வேறு பிரிவுகளில் 53 விதமான புத்தகங்களைப் பள்ளிக்கல்வித் துறை இத்திட்டத்திற்காக அச்சடித்து வழங்கி உள்ளது.

இந்தக் கதைப் புத்தகங்கள் மாணவ செல்வங்களின் விருப்பத்திற்குத் தக்க, 'நட', 'ஓடு', 'பற', 'நுழை' என தனித்தனியாகக் கருத்துகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.

 A Vaasippu Iyakkam scheme has been launched in tamil nadu government schools

இந்தப் புத்தகங்கள் இன்றைய இளம் தலைமுறையைக் கவரும்விதமாக வண்ணமயமான பக்கங்களில் அச்சடிக்கப்பட்டுள்ளன என்பது கூடுதல் சிறப்பு.

இந்தப் புத்தகங்கள் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துத் தரப்பு மாணவ, மாணவிகளையும் கவரும்படியான தலைப்புகளில் அச்சடிக்கப்பட்டுள்ளன. நவீனக் கால அறிவியல் சிந்தனையோடு கதைத் தேர்வுகளைத் தேர்வு செய்துள்ளது பள்ளிக்கல்வித் துறை.

 A Vaasippu Iyakkam scheme has been launched in tamil nadu government schools

உதாரணமாகக் காட்டுக்கு ராஜா என்றால் சிங்கம். அதைத்தான் பல ஆண்டுகளாகப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் கற்றுத்தந்து வருகிறார்கள். அதில் நவீன சிந்தனையைப் புகுத்தும் நோக்கில், 'எவன் சொன்னது நான் ராஜான்னு?' என்று ஒரு கதைப் புத்தகம் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதில் பல ஆண்டுகளாகக் கற்பிக்கப்பட்டு வந்த பழங்கதை அப்படியே தலைகீழாக மாற்றுச் சிந்தனையோடு முன்வைக்கப்பட்டுள்ளது. தனக்கு வழங்கப்பட்டுள்ள 'கொண்டைக் குருவி' புத்தகம் மிகச் சிறப்பாக உள்ளது என்கிறார் திருவொற்றியூர் அரசுப் பள்ளி மாணவி வினோதினி.

 A Vaasippu Iyakkam scheme has been launched in tamil nadu government schools

"எங்கள் பள்ளியில் நிறையப் புத்தகங்களை மேசை மீது வைத்திருந்தார்கள். அந்தத் தலைப்புகளைப் படித்துப் பார்த்தபோது எல்லா புத்தகங்களின் தலைப்பும் ஆர்வத்தைக் கிளப்புவதாக இருந்தன. எனவே எதை எடுத்துப் படிக்கலாம் என்பதில் குழப்பம் இருந்து. அதில், 'கொடைக் குருவி' புத்தகத்தைத் தேர்வு செய்து எடுத்தேன்.

இந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் முதல் பக்கமே மனதை ஈர்ப்பதாக இருந்தது. காடு, மலை, பூச்சி, விலங்கு எனப் பல படங்கள் இருந்தன. நான் இதுவரைப் பாடப் புத்தகங்கள்தான் படித்திருக்கிறேன். அதில், ஒரு விசயத்தைச் சொல்லி நிறையக் கேள்வி பதில்கள் கொடுத்திருப்பார்கள். ஆனால், இந்தப் புத்தகம் அப்படியில்லை. முழுக்க முழுக்க கதையாக இருந்தது.

அதன் நடு நடுவே நிறைய வண்ணப் படங்கள் இருந்தன. அதைப் பார்க்கவே இண்ட்ரஸ்டிங் ஆக இருந்து. செம புத்தகம் இது. முழுசா படித்தேன். நல்ல கதை" எனப் பேசிக்கொண்டே வந்த மாணவி, இறுதியில் என்ன நினைத்தாரோ பட்டென்று வெட்கப்பட்டு பேச்சை நிறுத்திக் கொண்டார்.

 A Vaasippu Iyakkam scheme has been launched in tamil nadu government schools

இவர் சொல்வதைப் பலவிதமான தலைப்புகளில் கதைப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. தலைப்புகள்கூட ஈர்ப்பாகவே உள்ளன. 'டாக்டர் எலி' எனப் புத்தகம். 'மகிழ்ச்சியான சிங்கம்' என்று ஒரு கதைப் புத்தகம். 'என்னைக் கேளுங்க அப்பா' என்று ஒரு புத்தகம். 'இனிப்புக் கீரை' என ஒரு புத்தகம். அனைத்தும் அழகழகான தலைப்புகளில் நூல் வடிவம் பெற்றுள்ளன.

'மரத்துக்கு யார் அம்மா? மண்ணுக்கு யார் அம்மா?' என்ற புத்தகத்தைப் பற்றி மாணவி தனலட்சுமி, "எங்கள் வகுப்பறையில் நிறையக் கதைப் புத்தங்கள் அடுக்கி வைத்திருந்தார்கள்.

 A Vaasippu Iyakkam scheme has been launched in tamil nadu government schools

அவ்வளவு புத்தகங்களும் நான் எடுத்து வரவில்லை. என்னால் மூன்று புத்தகங்கள்தான் வாங்கி படிக்க முடிந்தது. எனக்கு எல்லா புத்தகங்களையும் படிக்க வேண்டும் என ஆசை ஆசையா இருக்கிறது" என்று நளினமாகச் சிணுங்கியபடி சொன்னார்.

"நான் 'பிடிவாதம் பிடி' என்று ஒரு கதை புத்தகம் படித்தேன். இந்தக் கதையில் உள்ள ஒரு பெண் பள்ளிக்குப் போக முடியாமல் தவிப்பாள். அவள் வீட்டில் படிக்க வேண்டாம், வேலைக்குப் போ என்று சொல்லிக் கட்டாயப்படுத்துவார்கள்.

அதற்கு அந்த மாணவியின் ஆசிரியை, 'ஒரு கதையைச் சொல்லி வீட்டில் நீ பிடிவாதம் பிடி' என்று சொல்லித் தருவார்கள். அவளும் அப்படியே செய்வாள். அந்தக் கதையைப் போலத்தான் நீங்களும். உங்கள் வீட்டில் படிக்காமல் வேலைக்குப் போக நிர்ப்பந்தம் செய்தால் பிடிவாதம் பிடிக்க வேண்டும் என இந்தக் கதையும் முடிகிறது. எனக்கு இந்தக் கதை ரொம்ப பிடித்திருந்தது" என்கிறார்

இரண்டாவதாக நான் படித்த புத்தகம்தான் 'நான் தோசை சுடுவேன்'. இந்தக் கதையில் நிறைய கேரக்டர்ஸ் வந்தன. ஒவ்வொரு கேரக்டரும் தனக்குப் பாடத் தெரியும், ஆடத் தெரியும், நடிக்கத் தெரியும் என விதவிதமாக சொல்லும்.

கதையில் கடைசியாக, 'உங்களுக்கு என்னத் தெரியும்?' என்று கேட்டு இருப்பார்கள். அது எனக்குப் பிடித்திருந்தது. எனக்கு ஓவியம் வரையப் பிடிக்கும். அதேபோல பழைய பொருட்களை வைத்துக் கலைப் பொருட்களைச் செய்வது பிடிக்கும். அதை நான் ஆசிரியரிடம் சொன்னேன். அவர்கள் அதைச் செய்து காட்டச் சொன்னார்கள்.

 A Vaasippu Iyakkam scheme has been launched in tamil nadu government schools

மூன்றாவதாக, மரத்துக்கு யார் அம்மா? மண்ணுக்கு யார் அம்மா?' என ஒரு கதை புத்தகம். இந்தக் கதையில் எல்லா விசயத்தைப் பற்றியும் ஒரு பெண் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பாள். அதற்கு எல்லாம் விடை தெரிந்து கொண்டே இருப்பாள். அவளைப் போல நாங்களும் எல்லாவற்றுக்கும் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று கதை முடிகிறது.

ஆசிரியரும் எங்களிடம் அதைத்தான் சொன்னார்கள். ஒரு விசயம் புரியவில்லை என்றால் விட்டுவிடக் கூடாது. எல்லாவற்றையும் கேள்வி கேட்டு நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னார். இந்தக் கதையில் வரும் பெண்ணைப் போலவே நாங்களும் அறிவாளியாக இருக்கவேண்டும் என்றும் சொன்னார். அதனால் இந்தக் கதையும் எனக்குப் பிடித்திருந்தது" என்கிறார் இந்த அறிவாளி பிள்ளை.

இந்த 'மாபெரும் வாசிப்பு இயக்கம்' ரூ. 10 கோடி செலவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவித்திருந்தார்.

சொன்ன வேகத்தில் இப்போது இயக்கம் தொடங்கிவிட்டது. இயங்கத் தொடங்கிவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+