Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தப்போ எனக்கு சீமந்தம்.. சீசிங் ராஜா என்கூடதான் இருந்தாரு! மனைவி கண்ணீர் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி சீசிங் ராஜா இன்று காலை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவருக்கு தொடர்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அதனை மறுத்துள்ளார் சென்னை இணை ஆணையர் சிபி சக்ரவர்த்தி. இந்நிலையில் சீசிங் ராஜா என்கவுண்டருக்கு முன்னதாக அவரது மனைவி, தனது கணவரை போலீசார் போலி என்கவுண்டர் மூலமாக கொல்ல திட்டமிட்டுள்ளதாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டில் மிரட்டல் வழக்கு ஒன்றில், ஆற்காடு சுரேஷின் நண்பரான பிரபல ரவுடி சீசிங் ராஜாவையும் தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சீசிங் ராஜா செங்கல்பட்டு மாவட்டத்தில் நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக ஆஜராக வேண்டும்.

armstrong police seizing raja

ஆனால் பல ஆண்டுகளாக அந்த வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் போஸ்டர்கள் ஓட்டுனர் போலீசார். சீசிங் ராஜா குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் அந்த் போஸ்டர்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் ராஜா பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்று தனிப்படை போலீசார் சீசிங் ராஜாவை கைது செய்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. கடந்த 60 நாட்களுக்கும் மேலாக சீசிங் ராஜா தேடப்பட்டு வந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தது முக்கிய திருப்பமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ராஜாவை சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து நீலாங்கரை அருகே அவர் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததாகவும், அதனை காட்டுமாறு போலீசார் கூறியதாக கூறப்படுகிறது.

ஆயுதங்களை காட்டுவது போல் சென்ற சீசிங் ராஜா தப்பியோட முயன்றதாகவும் காவல் துறையினரை நோக்கி சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்து சீசிங் ராஜா பலியானார். இதனையடுத்து அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீசிங் ராஜா என்கவுண்டருக்கு முன்னதாக அவரது மனைவி தனது கணவரை கொல்ல திட்டமிட்டுள்ளதாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று வெளியிடப்பட்டிருந்த அந்த வீடியோவில் கையில் குழந்தையுடன் பேசியுள்ள அவர்," நேற்று காலை எனது கணவர் சீசிங் ராஜா எங்களுக்கு சாப்பாடு வாங்கி வருகிறேன் எனக் கூறி வெளியே சென்றார். அதற்கு பிறகு அவர் வரவில்லை. நாங்களும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தோம். சாயங்காலம் வரை அவர் வீட்டிற்கு வரவில்லை.

அப்பறம் தான் போலிசார் அவரை கைது செய்துள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது. சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் என் கணவர் சீசிங் ராஜாவுக்கு எந்த தொடர்புமே கிடையாது. சிசிங் ராஜாவுக்கும் எனக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதற்கு பிறகு அவர் எந்த குற்ற சம்பவங்களிலும் ஈடுபடவில்லை.

எங்களுக்கு குழந்தை பிறந்து கூட ஒன்றரை மாதம் தான் ஆகிறது. எங்களுக்கு எந்த பிரச்சினையும் வரக் கூடாது என்பதற்காக தனியாக வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் எனது கணவரை கைது செய்து அழைத்துச் சென்ற சென்னை போலீசார் அவரை போல என்கவுண்டர் மூலம் சுட்டு கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த போது தான் எனக்கு வளைகாப்பு நடைபெற்றது. அப்போது என் கணவர் சீசிங் ராஜா என்னுடன் தான் இருந்தார். அதற்கான புகைப்படம் வீடியோ உள்ளிட்ட ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.

எனது கணவர் சீசிங் ராஜாவின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லாமல் தமிழ்நாடு அரசு தான் காப்பாற்ற வேண்டும். பொய்யான தகவல் கொடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளனர். எனவே எனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவரை காப்பாற்ற வேண்டும்" என கண்ணீர் மல்க கோரிக்கையை கொடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+