சென்னையில் மின்சாரம், தண்ணீரை கட் செய்த ஹவுஸ் ஓனர்.. லீசுக்கு குடியிருக்கும் பெண் வெளியிட்ட வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் லீசுக்கு குடியிருக்கும் பெண் ஒருவர், வீட்டை காலி செய்வதாக உரிமையாளரிடம் சொன்னதால், மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதியை முடக்கிவிட்டதாக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னையில் லீஸ்க்கு வீடு பார்ப்போம். வீட்டின் கள நிலவரம் என்ன, வீட்டில் ஏற்கனவே பிரச்சனைகள் உள்ளதா என்பதை அறிந்து செல்வது நல்லது. வீட்டில் லீஸ்க்கு போக முடிவு செய்துவிட்டால், அந்த வீட்டின் உரிமையாளரால் மீண்டும் பணத்தை தரக்கூடியவரா என்பதை அறிந்து செல்ல வேண்டும் என்கிறார்கள் அனுபவம் உள்ளவர்கள்.

Chennai rent

எங்காவது சிக்கலான, வில்லங்கமான வீடுகளுக்கு லீஸ்க்கு குடிபோய்விட்டு, அதனைவிட்டு வெளியே முடியாமல் தவிக்கும் நிலை சென்னையில் பலருக்கும் ஏற்படுகிறது. ஒன்று தண்ணீர் பிரச்சனையாக இருக்கும். இரண்டாவது ஜன்னல், சுவர், மின்சார லைன், பைப் லைன், டைல்ஸ் போன்ற பிரச்சனைகள் இருக்கும். அதை அட்வான்ஸ் வாங்கிய உரிமையாளர் சரி செய்து தராமல் ஏமாற்றும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

அதேபோல் லீஸ் வீட்டில் ஓனர் யார் என்றே தெரியாமல் கொடுத்துவிட்டு பின்னாடி பணம் கிடைக்காமல் அவதிப்படுவதும் நடக்கிறது. சில பகுதிகளில் இன்னும் வித்தியமாசமாக, லீஸ் ஒப்பந்தம் போட்டாலும் பத்திரங்களை தராமல் வைத்துக்கொள்வதும் நடக்கிறது. இதனால் சட்ட ரீதியாக நிவாரணம் பெற முடியாத நிலை இருக்கிறது. அதேபோல் லீசுக்கு வீடு விடுவோர், வீட்டின் பத்திரத்தை அடகு வைத்து வங்கியில் கடன் வாங்கியிருப்பார்கள், அதை அவர்கள் கட்டாமல் விட்டுவிட்டால், லீசுக்கு குடியிருப்போர் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது. இப்படி லீஸ் வீட்டிற்கு சென்ற பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். அப்படித்தான் பழைய வண்ணாரப்பேட்டையில் ஒரு பிரச்சனை நடந்துள்ளது.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை தட்டான்குளம் தெருவில் செல்வராஜ் என்பவர் தனக்கு சொந்தமான வீட்டை லீசுக்கு விட்டுள்ளார். இந்நிலையில், அந்த வீட்டை ஷாலினி என்ற பெண் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து லீசுக்கு எடுத்து குடியேறி உள்ளார். இதனிடையே, ஷாலினி வீட்டை காலி செய்யப் போவதாக கூறி வீட்டு உரிமையாளர் செல்வராஜிடம் கூறியதுடன்., பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.

அதன்பின்னர் வீட்டின் உரிமையாளரான செல்வராஜ், பெண்ணிடம் எந்த பதிலும் சொல்லாமல், அடிக்கடி அந்தப் பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஷாலினி புகார் அளித்தாராம்., ஆனால் இதுவரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகிறார்..

இதனால் இந்தச் சம்பவம் குறித்து ஷாலினி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது, வீட்டின் உரிமையாளர் செல்வராஜ் 2 நாட்களாக வீட்டில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட இணைப்புகளை துண்டித்துள்ளார் என்றும் இதனால் தான் கைக்குழந்தையுடன் இரண்டு நாட்களாக அவதிப்பட்டு வருவதாக கூறியதுடன், வீட்டின் உரிமையாளரையும் வீடியோவில் காட்டினார். மேலும் வீடு பற்றியும் காட்டினார். ஷாலினி வீடியோ எடுக்கும் போத கோபத்துடன் வந்த செல்வராஜ், அவரின் செல்போனை தட்டிவிட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+