'போடி தொகுதியில்..ஓ.பி.எஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கணும்'.. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!
சென்னை: போடிநாயக்கனுர் தொகுதியில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனுர் தொகுதியில் போட்டியிட்டார்.

ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து தி.மு.க சார்பில் தங்கதமிழ்செல்வன் களம் கண்டார். தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ஓ.பன்னீர்செல்வம், தங்கதமிழ்செல்வனை விட 11,055 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில் போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
போடி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் இது தொடர்பான வழக்கை தாக்கல் செய்துள்ளார். அ.தி.மு.க வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்புமனுவில் விவரங்களை மறைத்துள்ளார். எனவே அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று வாக்காளர் மிலானி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications