அசிங்கம்.. அவதூறு.. சிக்க போகும் "பயில்வான் ரங்கநாதன்".. சென்னை கமிஷ்னருக்கு பறந்த பரபர புகார்!
சென்னை: சினிமா நடிகை, நடிகர்கள் பற்றி அவதூறாக கருத்துக்களை தெரிவித்து வருவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பயில்வான் ரங்கநாதன், பத்திரிக்கை துறையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமா செய்திகளை வெளியிடுவதற்காக யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
சினிமாவில் நடக்கும் பல்வேறு கிசு கிசு தகவல்களை இவர் வெளியிடுவது வழக்கம். பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் பற்றி அதிர்ச்சி அளிக்கும் செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்.

முன்னணி நட்சத்திரங்கள்
பெரும்பாலும் முன்னணி நட்சத்திரங்கள் பற்றி இவர் பல்வேறு செய்திகளை வெளியிட்டு கடுமையான சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். உதாரணமாக நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவகாரத்தின் போது அதை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார். இசையமைப்பாளர் ரகுமான் குடும்பம் பற்றியும் இவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதேபோல் சிம்பு பற்றியும் பல்வேறு வீடியோக்களை இவர் வெளியிட்டுள்ளது வழக்கம்.

கமல்ஹாசன்
சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் குறித்தும், நடிகை அபிராபி, சிம்ரன் ஆகியோரையும் தொடர்பு படுத்தி இவர் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இவர்களுடன் அவர்களுக்கு தொடர்பு, அவர்களை இவர்களை விரும்புகிறார்கள் என்று ஆதாரம் இல்லாத பல்வேறு தகவல்களை இவர் வெளியிடுவதாக இணையத்தில் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இவரின் சில கருத்துக்கள் அத்துமீறி இருப்பதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

பெண் நடிகைகள்
குறிப்பாக பெண் நடிகைகள் குறித்து இவர் நிறைய கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினிமா துறையில் பலர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது பயில்வான் ரங்கநாதன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி திவ்யா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். வீடியோ ஆதாரங்களுடன் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார் என்ன?
இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய திவ்யா, தொடர்ந்து பெண்கள் மீது ஆன்லைனில் இவர் தவறாக பேசி வருகிறார். நிறைய முறை இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் இப்போதுதான் முறையாக புகார் பதிவு செய்து இருக்கிறோம். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இவர் அவதூறாகவும், அசிங்கமாகவும் பெண்கள் பற்றி பேசுவதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications