சூப்பர் மார்கெட்டை 2 மணி நேரம் சுற்றிய பெண்.. ஒன்னுமே வாங்கல... ஆஹா கனலும் நினைக்காத ட்விஸ்ட்
சென்னை: சோஷியல் மீடியாவில் வீடியோ ஒன்று கடந்த 2 நாட்களாகவே வைரலாகி கொண்டிருக்கிறது... இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பதறிப்போய் தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட துவங்கி விட்டார்கள்... ஆனால் அந்த வீடியோவின் உண்மைத்தன்மை தெரிந்ததுமே கொந்தளித்து போய் உள்ளனர்.. என்ன நடந்தது? அது என்ன வீடியோ?
சூப்பர் மார்க்கெட் பகுதியில், ஒரு ஸ்டேஷனரி ஸ்டோரில், பெண்கள் பயன்படுத்த கூடிய பர்ஸ், செருப்பு, அழகிய பைகள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பதற்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த கடைக்கு பெண் ஒருவர் சென்றுள்ளார். கடையில் உள்ள பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக நின்று நிதானமாக பார்த்துள்ளார்... ஆனால் எதையுமே வாங்கவில்லை.. கிட்டத்தட்ட 2 மணி நேரம் கடைக்குள்ளேயே சுற்றி சுற்றி பொருட்களை பார்த்து விட்டு, தனக்கு எதுவும் பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டு கடையை விட்டு வெளியே செல்ல முயன்றார்..
சூப்பர் மார்க்கெட் - பேன்சி ஸ்டோர்
அதுவரை பொறுமையாக இருந்த அந்த கடையின் பெண் உரிமையாளர், இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.. உடனே வெளியில் செல்ல முயன்ற அந்த பெண் வாடிக்கையாளரின் காலில் விழுந்து, ஏதாவது வாங்கிட்டு போங்க, ஒரு பொருளையாவது வாங்கிட்டு போங்க என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்..
இதனால் அதிர்ச்சியான அந்த பெண் வாடிக்கையாளர், என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போய் நின்றுவிட்டார்.. இவை யாவும் அந்த கடையிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, இணையத்திலும் வெளியாகிவிட்டது..
இதைப் பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்துபோய், 2 மணிநேரம் கடையின் உள்ளே ஒவ்வொரு பொருளாக நின்று பார்த்து விட்டு, எதுவும் வாங்கவில்லை என்றால் எப்படி? கடை உரிமையாளர்களின் முயற்சி, அவர்களுடைய நேரம், அவர்களின் கண்ணியம் பாதுகாக்கப்படும் வகையில் கஸ்டமர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று கமெண்ட்களை பதிவிட துவங்கி விட்டனர்...
விளக்கம் தந்த கடை ஓனர்கள்
இணையவாசிகளின் கமெண்ட்கள் தாறுமாறாக வெளிவந்ததையடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென மற்றொரு வீடியோ வெளியானது..
அதில், உத்தரகண்ட் மாநிலம் டேஹ்ராடூன் நகரின் பிரேம் நகர் பகுதியில் எங்களது இந்த சூப்பர் மார்க்கெட் கடை உள்ளது... நாங்கள் 2 பெண்களுமே அந்த கடையின் உரிமையாளர்கள்,. எங்களது பெயர் கன்னு தத்தா, சிம்ரன் காம்பீர்..
இந்த வீடியோ உண்மையில் நடந்த சம்பவம் கிடையாது... இது முழுக்க பொழுதுபோக்கு நோக்கத்தில் எடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட் காட்சியே.. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை.. மக்களை சிரிக்க வைப்பதற்காகவே இந்த வீடியோ எடுத்தோம்.. ஆனால் இது இவ்வளவு சீரியஸாக போகும் என்று எங்களுக்கு தெரியாது... ஒருசிலர் உணர்ச்சிவசப்பட்டு விட்டதால் இந்த விளக்கத்தை தருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications