சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தளபதியை போல மாஸ்க் இல்லாமல் ஜெட் ஓட்டிய பெண்; இதெல்லாம் சாத்தியமா பாஸ்? அறிவியலின் பதில் இதுதான்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்டு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், சில காட்சிகள் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தன.

Recommended Video

    America-வின் Secret ஆயுதம்! வீட்டு Balcony-யிலேயே தீவிரவாதியை துண்டாடிய பயங்கர Missile *Defence

    பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் சுகோய் போர் விமானத்தை எடுத்துக்கொண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்துவிடுவார். இந்த காட்சிகள் இத்திரைப்படத்தின் மிகவும் ரசிக்கத்தக்க காட்சிகளாகும். ஆனால் இதைத்தான் பலர் விமர்சித்திருந்தனர்.

    இந்த விமானத்தை ஓட்டும்போது விஜய் ஆக்சிஜன் மாஸ்க்கை கழட்டி விட்டு ஹாயாக பேசிக்கொண்டிருப்பார். தற்போது அதேபோல பெண் விமானி ஒருவர் ஆக்சிஜன் மாஸ்க்கை கழட்டிவிட்டு பயணித்துள்ளார். உண்மையிலேயே இந்த மாதிரி எல்லாம் செய்ய முடியுமா என்பது குறித்துதான் இந்த செய்தி தொகுப்பு விவரிக்கிறது.

    துரத்தும் 'ஜெயலலிதா’ மரணம்! எய்ம்ஸ் தந்தது அறிக்கை தானே! இறுதி தீர்ப்பு இல்லையே? விடாத புகழேந்தி..! துரத்தும் 'ஜெயலலிதா’ மரணம்! எய்ம்ஸ் தந்தது அறிக்கை தானே! இறுதி தீர்ப்பு இல்லையே? விடாத புகழேந்தி..!

    பீஸ்ட் திரைப்படத்தின் கதை

    பீஸ்ட் திரைப்படத்தின் கதை

    விஜய் 'ரா' ஏஜென்ட்டாக இருந்த காலத்தில், ஒரு முக்கிய தீவிரவாதியை பிடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்துகொண்டிருப்பார். அந்த தீவிரவாதியால் இவருக்கு தூக்கமே கெட்டுவிடும் அளவுக்கு பல சம்பவங்கள் நடந்திருக்கும். இந்நிலையில், அவரை எப்படி பிடிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்த கதாநாயகனுக்கு ஒரு போர் விமானம் கிடைத்துவிடும். இதை எடுத்துக்கொண்டு அந்த தீவிரவாதி இருக்கும் இடத்திற்கு சென்று அவரை பிடித்து வருவார்.

    மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள்?

    மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள்?

    அப்படி பிடித்து வரப்பட்ட தீவிரவாதி இந்தியாவுக்கு பத்திரமாக கொண்டு வரப்பட்டாரா என்பது படத்தின் கதை. ஆனால் இந்த பயணத்தின்போது போர் விமானத்தை ஓட்டிக்கொண்டே அவர் தனது ஆக்சிஜன் மாஸ்கை கழட்டிவிட்டு இந்திய ராணுவத்துடன் பேசிக்கொண்டிருப்பார். இந்த காட்சி பலராலும் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. ஏனெனில் இப்படி போர் விமானம் ஓட்டிக்கொண்டு இருக்கும் போது ஆக்சிஜன் மாஸ்க்கை கழட்ட முடியாது என்றும் அப்படி செய்தால் உயிரிழப்பு ஏற்படும் என்றும் எனவே இது மிகைப்படுத்தப்பட்ட காட்சி என விமர்சனங்கள் மேலெழுந்தன.

    ரியல் ஆன ரீல்

    ரியல் ஆன ரீல்

    ஆனால் தற்போது விஜய் ரசிகர்களுக்கு புதிய வீடியோ ஒன்று சிக்கியுள்ளது. அமெரிக்காவின் பெண் விமானி ஒருவர் Aero L-39 Albatros எனும் போர் விமானத்தை இயக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். சரி இதில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? மேட்டரே இங்கதான் இருக்கு. இந்த பெண் விமானி போர் விமானத்தை இயக்கும்போது தனது ஆக்சிஜன் மாஸ்க்கை சில விநாடிகள் கழட்டி வைத்துவிட்டு பயணித்துள்ளார்.

    குஷியில் விஜய் ரசிகர்கள்

    குஷியில் விஜய் ரசிகர்கள்

    அடிச்சான் பாரு அப்பாயிமென்ட் ஆர்டர்னு உடனே விஜய் ரசிகர்கள் குதித்தெழுந்து என் தலைவனை யாரெல்லாம் கிண்டல் பண்ணீங்களோ அவங்கெல்லாம் வரிசையில வாங்கனு, டிவிட்டர், இன்ஸ்டா, பேஸ்புக்னு இருக்குற எல்லா சமூக வலைத்தளங்களிலும் இந்த ரெண்டு வீடியோவையும் போட ஆரமிச்சுட்டாங்க. அப்புறம் என்ன? எத தொறந்து பாத்தாலும் "வெடி வெடிக்கும் தெறி பறக்கும்னு" இந்த வீடியோதான் சுத்திட்டு இருக்கு. சரி இதெல்லாம் நெஜமாவே சாத்தியமானு சில விஷயங்கள தேடி பார்த்தா பல உண்மை வெளி வருது.

    விதிகள்

    விதிகள்

    இப்படியெல்லாம் பயணிப்பது என்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்னு கூகுள் ஆண்டவர் சொல்கிறார். அதாவது பொதுவாக ஒவ்வொரு விமானமும் இவ்வளவு ஒசரத்துலதான் பறக்குனும்னு விதி இருக்கு. அதாவது சாதாரண பயணிகள் விமானம் 45,000 அடி உயரம் வரைதான் பறக்க முடியும். இதே ராணுவ விமானங்கள் அப்படின்னா கொஞ்சம் ஒசத்தி. அதாவது இந்த விமானங்கள் 50,000லிருந்து அதுக்கும் அதிகமா பறக்கலாம். இந்த போர் ஜெட் விமானங்கள் 90,000 வரை பறக்கும் திறன் கொண்டது.

    அறிவியல் என்ன சொல்கிறது?

    அறிவியல் என்ன சொல்கிறது?

    இப்படி இருக்கும்போது உயரம் அதிகமாக அதிகமாக ஆக்சிஜன் அளவு குறைந்துகொண்டே வரும். இதனாலதான் ஜெட்டுல போறவங்க மாஸ்க் போடுறாங்க. அப்படி போடலனா ஒரேடியா போயிடுவீங்கனு ஆய்வாளர்கள் சொல்றாங்க. ஏன்னா ஆக்சிஜன் குறைஞ்சா 'ஹைப்போக்ஸியா' ஏற்படும். சாதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 95 சதவிகிதத்துக்கு மேல் இருக்க வேண்டும். கரியமில வாயு 70 முதல் 80 சதவிகிதம் இருக்க வேண்டும். ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு 90%-க்கு கீழ் குறைவதை ஹைப்போக்ஸியா என்கிறோம்.

    ஆள் அவுட்

    ஆள் அவுட்

    ஹைப்போக்ஸியா இருப்பவர்களின் சுவாச விகிதம் ஒரு நிமிடத்துக்கு 25-க்கு மேலிருக்கும். உதடு மற்றும் நாக்கு நீல நிறத்துக்கு மாறலாம். ஹைப்போக்ஸியாவை நீண்ட நேரம் நீடிக்கவிட்டால் ஆக்ஸிஜன் குறைபாட்டால், பல்வேறு உறுப்புகள் செயலிழக்க ஆரம்பித்து விடும். இதில் மிக முக்கியமானது மூளை. மூளைக்கு 3 முதல் 6 நிமிடங்கள்வரை ஆக்ஸிஜன் இல்லை என்றாலே அது செயலிழந்துவிடும் என அறிவியல் கூறுகிறது. எனவே படத்தை படமாக பாருங்க, அறிவியலையும் லைடுல கொஞ்சம் கத்துகோங்கனு விமர்சனம் செய்தவர்கள் தற்போது அறவுரை கூறி வருகின்றனர்.

    English summary
    (விஜய் நடித்த பீஸ்டு பட காட்சிகளை டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்): In the movie, while piloting the fighter jet, Vijay takes off his oxygen mask and talks. Now, similarly, a female pilot has taken off her oxygen mask and traveled. This news package explains whether this model can really be done.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X