கண்ணாடி சில்லு போல உடைஞ்ச உறவு.. டெல்லியில் நடந்த "பஞ்சாயத்து".. கட்சி மாறும் இளம் தலை.. போச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு கட்சியின் உட்கட்சி மோதல் டெல்லி வரை சென்றுள்ளதாம். டெல்லி வரை கட்சி மோதல் குறித்த பஞ்சாயத்து சென்றுள்ளதாம்.

இரண்டு வாரங்களுக்கு முன் நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

A young leader from a BIG party is going to switch parties in Tamil Nadu after the Lok Sabha election

இரண்டு வாரம் முன்பு 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.

தமிழகத்தில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் முதலில் 72.09 சதவீதம், 2வது 69.46 சதவீதம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 69.71 சதவீதம் என 3வது முறையாக மாற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உட்கட்சி பூசல்கள்: லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் முடிந்தாலும்.. தேர்தலுக்கு பிந்தைய பரபரப்பு இன்னும் தமிழ்நாட்டில் அடங்கவில்லை. அதிலும் லோக்சபா தேர்தல் காரணமாக கட்சிகளுக்கு இடையே புதிய பிரச்சனைகள், புதிய மோதல்கள் ஏற்பட்டு உள்ளன.

சில கட்சிகளுக்கு உள்ளே உட்கட்சி மோதலும் உச்சம் தொட்டு உள்ளது. அந்த வகையில்தான் தமிழ்நாட்டில் ஒரு கட்சி உள்ளே கடுமையான உட்கட்சி மோதல் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி கட்சியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி என்று உட்கட்சி ரிப்போர்ட் தெரிவித்துள்ளதால் அந்த கட்சியில் கடும் பூசல் ஏற்பட்டு உள்ளதாம்.

அதன்படி கட்சியின் தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள் மொத்தமாக அணிவகுக்க தொடங்கி உள்ளனராம். மூத்த நிர்வாகிகள் பலரும் தலைவரின் தன்னிச்சையான செயல்பாடுதான் காரணம் என்று புகார் வைக்க தொடங்கி உள்ளனராம். அதோடு கட்சியின் செலவுக்காக மேலிடம் கொடுத்த நிதியை தலைவர் தங்களுக்கு கொடுக்கவே இல்லை என்றும் மூத்த நிர்வாகிகள் புகார் வைக்கின்றனராம். தேர்தலில் பெரிய நிதி முறைகேடு நடந்து உள்ளது என்று நிர்வாகிகள் புகார் வைக்கின்றனராம்.

நிதி முறைகேடு: இந்த நிதி முறைகேடு தொடர்பாக கட்சியின் தலைவர் ஒருவருக்கும் - அவருக்கு லெப்ட் ஹேண்டாக இருந்தவருக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளதாம். இவர்கள் இருவரும் ஒன்றாக, நட்பாகவே இருந்தனர்.

ஆனால் தேர்தல் நிதி பயன்பாட்டில் இருவருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளதாம். இதையடுத்து வடக்கில் இருக்கும் நிர்வாகி ஒருவரிடம் விஷயம் கொண்டு செல்லப்பட்டு உள்ளது அந்த நிர்வாகியிடம் இது பற்றிய ஆலோசனைகள் செய்யப்பட்டு உள்ளது. இரண்டு தலைகளிடம் அந்த தலைவர் பேசி பஞ்சாயத்து செய்துள்ளார்,

பஞ்சாயத்து தோல்வி: ஆனால் அந்த பஞ்சாயத்து தோல்வி அடைந்தது. இருவருக்கும் இடையில் எவ்வளவு பேசியும் கூட சமாதானம் செய்து வைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்தே அந்த நிர்வாகி கட்சி மாறும் முடிவை எடுத்துள்ளாராம்.

அந்த இளம் நிர்வாகி ஏற்கனவே தனக்கு எதிராக இருக்கும் அந்த கட்சியுடன் பேசி வருகிறாராம். தனது கட்சி நிர்வாகிகள் சிலரை அழைத்துக்கொண்டு அந்த இளம் நிர்வாகி மொத்தமாக கட்சி மாறும் முடிவை எடுத்துள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+