Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

50 ஆயிரம்..அம்மா என்னை கடத்திட்டாங்க! தாயிடம் ஆட்டைய போட கடத்தல் நாடகம்! தொக்காய் சிக்கிய ‘ஒத்தரோசா’

Subscribe to Oneindia Tamil

சென்னை : நண்பர்களுடன் செலவு செய்து ஜாலியாக ஊர் சுற்றுவதற்காக பெற்ற தாயிடமே ஐம்பதாயிரம் ரூபாயை பணம் பறிக்க திட்டமிட்டு கடத்தல் நாடகம் ஆடிய இளம் பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்ததோடு அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்திருக்கின்றனர்.

தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் செல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் இளம் தலைமுறைர் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு வந்து விட்டனர். சமூக வலைதள குற்றங்கள் மட்டுமல்லாது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாவதும் அதிகரித்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க இளம் பெண்களும் போதை உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தவறான பாதைக்கு செல்வதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இளம் பெண்

இளம் பெண்

அந்த வகையில் நண்பர்களுடன் ஊதாரித்தனமாக செலவு செய்ய தாயிடமே பணத்தை பறிக்க திட்டமிட்டு கடத்தல் நாடகம் ஆடிய இளம்பெண் ஒருவர் போலீசில் வசமாக சிக்கி இருக்கிறார். திட்டம் தீட்டியது எப்படி? அவரது திட்டம் போலீசாரின் விசாரணையில் அம்பலமானது எப்படி? என்பது குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி வளர்த்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இளம் பெண் என்பதால் நடவடிக்கை எடுக்காமல் எச்சரிக்கை விடுத்து அந்த பெண்ணை போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்திருக்கின்றனர்.

கடத்தல்

கடத்தல்

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ராணி என்பவரது மகள் தான் 22 வயது மகளே கடத்தப்பட்டதாக கூறியவர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிசெய்யும் இளம் பெண் தனது தயார் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தம்மை மர்மநபர்கள் கடத்திவிட்டதாகவும் 50,000 ரூபாய் பணத்தை நேரில் வந்து கொடுத்தால் மட்டுமே தன்னை விடுவிப்பதாகவும் கூறி தமது செல்போனையும் பிடிங்கி வைத்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

ஆனால் அதிர்ச்சி அடைந்த ராணி பூவிருந்தவல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார், ராணியை தொடர்பு கொண்டு பேசிய செல்போன் எண்ணை கேட்டு பெற்ற போலீசார் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். அதில் பேசியவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த செல்போன் எண்ணிற்கு உரியவர் எங்கு உள்ளாரென சோதித்தனர்.

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

அப்போது வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையை காட்டியது அங்கு விரைந்த போலீசார் மலையம்பாக்கம் அருகே ராணியின் மகளை மீட்டு விசாரித்தனர். அப்போது கோயம்பேட்டில் வைத்து ஒரு ஆட்டோவில் தன்னை ஒரு இளைஞர் மற்றும் இரண்டு பெண்கள் சேர்ந்து கடத்திவந்ததாகவும் பணம் கேட்டு மிரட்டிவிட்டு தன்னை இங்கு இறக்கிவிட்டு சென்றதாகவும் தெரிவித்தார். இதை அடுத்து அந்த பகுதியில் இருந்த கடையில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

அப்போது கடத்தப்பட்டதாக கூறிய பெண் அவரது இரண்டு தோழிகள் மற்றும் ஒரு ஆண் நண்பர் ஆகியோர் உடன் மோட்டார் சைக்கிள்லில் ஒன்றாக வந்து இறங்குவதும் பின்னர் ஜாலியாக பேசியபடி அங்கு இருந்த டி கடை ஒன்றில் அமர்ந்து அரட்டை அடித்தபடியே டி குடிக்கும் காட்சி பதிவாகிருந்தது. அதன்பின் தமது தோழியின் செல்போனை வாங்கி தனியாக சென்று பேசும் காட்சியும் இடம்பெற்றுருந்தது. அது குறித்து அந்த பெண்ணிடம் போலீஸ் விசாரணை தீவிரம் அடைந்த போது தமது தாயிடம் பணம் பறிக்க இதுபோன்ற நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது. இதை அடுத்து அந்த பெண்ணை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+