நான் வாழ தகுதியில்லாவன்! ஏரியில் மிதப்பேன்.. நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பிய நிஷாந்த்.. நடந்தது என்ன?
சென்னை: சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையின் சிஇஓ மகளை திருமணம் செய்ய இருந்த இளைஞர் தற்கொலை செய்து கொள்வதாக குறுஞ்செய்தி அனுப்பிய இளைஞரின் கார் போரூர் ஏரி அருகே இருப்பதால் அவரது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை வடபழனியைச் சேர்ந்த 27 வயது பெண். இவர் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது நிஷாந்த் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. இவர்கள் இருவரும் கல்லூரியில் சேர்ந்த பிறகும் அந்த காதல் தொடர்ந்தது.
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை அந்த பெண்ணை நிஷாந்த் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த பெண்ணிடம் இருந்து சிறிது சிறிதாக ரூ 68 லட்சத்தை நிஷாந்த் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

நிஷாந்த்
திருமணம் குறித்து பேசும்போதெல்லாம் நிஷாந்த் மசியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்த அந்த பெண், மீண்டும் மீண்டும் அவரை வற்புறுத்தியுள்ளார். ஆனாலும் சாக்கு போக்கு சொல்லியே திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் சிஇஓ மற்றும் தொழிலதிபரின் மகளை நிஷாந்த் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

விருகம்பாக்கம் போலீஸார்
இதை அந்த பெண் எப்படியோ அறிந்து கொண்டார். உடனே இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்து நிஷாந்துக்கும் பணக்கார பெண்ணுக்கும் நடக்கவிருந்த திருமணத்தையே நிறுத்திவிட்டார். இதுகுறித்து நிஷாந்தின் பெற்றோர் திருமணம் நின்று போன விஷயத்தை தனது உறவினர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பிவிட்டனர்.

தலைமறைவு
இதையடுத்து நிஷாந்த் தலைமறைவானார். கடந்த 4 நாட்களாக போலீஸார் நிஷாந்தை தேடி வந்தனர். இந்த நிலையில் தனது நண்பர்களோடு நேற்று மது அருந்திய நிஷாந்த் பிறகு வேறு ஒரு நண்பரின் காரை எடுத்துக் கொண்டு வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் சிறுதி நேரத்தில் வாட்ஸ் ஆப் மூலம் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு தகவலை அவர் அனுப்பினார்.

நல்ல நண்பர்கள்
அதில் நல்ல நண்பர்கள் நீங்கள், நான் வாழ தகுதியற்றவன், நாளை ஏதாவது ஒரு ஏரியில் எனது சடலம் மிதக்கும் என குறுந்தகவல் அனுப்பிவிட்டு செல்போன் எண்ணை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார். இதையடுத்து இந்த தகவலை அவரது நண்பர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

போரூர் ஏரி
பின்னர் நிஷாந்தின் செல்போன் எண் போரூர் ஏரி அருகே ஸ்விட்ச் ஆப் ஆனது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்த போது அவர் ஓட்டி வந்த கார் மட்டும் ஏரி அருகே இருந்ததை கண்டுபிடித்தனர். நிஷாந்த் கூறியது போல் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பதை கண்டறிய விருகம்பாக்கம் தீயணைப்புத் துறை வீரர்கள் போரூர் ஏரியில் நிஷாந்த் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிஷாந்தின் உடல் கிடைக்காத நிலையில் அவர் உண்மையில் நிஷாந்த் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது நாடகமாடுகிறாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் போலீஸார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications