ஆதார் எண் + பான் கார்டு.. வங்கி கணக்கு முடக்கமா? கடைசி நாளும் முடிஞ்சிடுச்சே.. வெளியான முக்கிய தகவல்
சென்னை: பான் கார்டையும் ஆதார் அட்டையையும் இணைக்க நேற்றே கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவித்திருந்த நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வட்டமடித்து வருகிறது.
நாம் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்று, பான் கார்டு.. வங்கி தொடர்பான எல்லா சேவைகளுக்கும் இந்த கார்டுதான் உதவுகின்றன.. காரணம், நம்முடைய அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று எல்லாமே இந்த பான் கார்டில்தான் இணைக்கப்பட்டு இருக்கும்.
பான் கார்டு: நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.. நேற்றைய தினம், ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.. இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்ல, அப்படி இணைக்கப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட நபரால் பரிவர்த்தனைகளின்போதும், வருமான வரி சார்ந்த விஷயங்களிலும் பான் எண்ணை குறிப்பிட முடியாது. அதுமட்டுமல்ல, வருமான வரித்தாக்கல் செய்ய முடியாது. நிலுவையில் உள்ள வருமான வரி படிவங்கள் செயல்படுத்தப்படாது. நிலுவையில் உள்ள வருமான வரி ரீஃபண்ட் தொகை வராது. பான் செயலிழந்துவிட்டால் அதிக டிடிஎஸ் (TDS) வரி வசூலிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
விழிப்புணர்வு: ஏற்கனவே, இந்த இணைப்பு குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், பலரும் இதை செய்யவில்லை... அதனால்தான், ஜூன் 30ம் தேதி வரை மறுபடியும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.. இப்படி கால அவகாசம் நீட்டிக்கப்படுவது இது ஐந்தாவது முறையாகும்... இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது, ஜூன் 30ம் தேதிதான் கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மேலும் அவகாசம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், கால அவகாசம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதற்கான உத்தரவை, ரிசர்வ் வங்கிதான் வெளியிடும்..
இன்னொரு சான்ஸ்: இப்படிப்பட்ட சூழலில், முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. நேற்றுதான் கடைசி நாள் என்று சொல்லியும், ஆதார் + பான் கார்டுகளை இணைக்கவில்லையாம்.. இன்னும் குறிப்பிட்ட அளவிலான சதவிகிதத்தினர் இணைக்காததால் மறுபடியும் வாய்ப்பு கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வங்கி உயர் அதிகாரிகள் சொல்லும்போது, பானுடன் ஆதார் எண்ணை இன்னும் பலர் இணைக்காமல் இருக்கிறார்கள்.. இது முழுக்க முழுக்க வங்கி பணியை சார்ந்ததாகும்.. ஒருவருக்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளது? புதிதாக வாங்குவது போன்ற விவரங்கள் ஆதார் மூலம் தெரியவந்து விடும்.
கால நீட்டிப்பா?: அதேபோல, வங்கியில் பணம், காசோலை பரிவர்த்தனை விவரங்கள் பான் கார்டு மூலம் தெரியும்... எனவே, இந்த இரண்டையும் இணைத்து விட்டால் ஒட்டுமொத்த ஒருவரது சொத்து, பண பரிவர்த்தனை தெரிந்து விடும். அதனால் சிலர் இணைக்காமல் உள்ளனர். ஒருசிலர் அறியாமையால் இணைக்காமல் இருக்கிறார்கள்..
எனவே, இணைக்காதவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படுமா? என்பது குறித்து ரிசர்வ் வங்கி தான் முடிவு செய்யும். இதுபற்றிய அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கிறோம்" என்கிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications