Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆதார் அட்டை வைத்திருக்கிறீங்களா? ஆதார் அட்டையில் எத்தனை முறை பெயர மாற்றலாம்? உடனே அப்டேட் பண்ணிடுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதார் கார்டுகளின் அவசியம் என்னென்ன தெரியுமா? உங்களுடைய ஆதார் கார்டுகளை வேறு யாராவது தவறாக பயன்படுத்துகிறார்களா? என்பதை எப்படி கண்டுபிடிப்பது? ஆதார் கார்டை அப்டேட் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? ஆதார் மையத்தில் கட்டணம் எவ்வளவு? அனைத்தையும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் அந்த அடையாளத்தை பயன்படுத்தலாம். நீங்கள் இருக்கும் ஊரிலோ அல்லது மாநிலத்திலோ மட்டும்தான் ஆதார் செல்லுபடியாகும் என்று இல்லை. நாடு முழுவதும் அடையாள ஆவணமாக ஆதார் ஏற்றுக் கொள்ளப்படும்.

Aadhaar Card Aadhaar update Central Government

ஆதார் கார்டுகளின் பயன்கள் என்னென்ன?

பிஎம் கிசான் முதல் அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்துமே இப்போது மக்களின் வங்கிக் கணக்குக்கே நேரடியாக அனுப்பப்பட்டு வருகிறது. இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் நேரடியாக மக்களை சென்றடைய ஆதார் அட்டை அவசியம்.. சிம் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆதாரை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ள நிலையில், ரேஷன் கார்டிலும் ஆதாரை இணைத்தாக வேண்டும்.

ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இருந்தால் மட்டுமே ரேஷன் உதவிகளைப் பெறமுடியும். இதற்கும் ஆதார் கார்டுகளின் பங்கு அதிகமானது. மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிப்பது முதல் வருங்கால வைப்பு நிதியில் பணம் எடுப்பது வரையிலும் ஆதார் கார்டுகள் முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு, குறு நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும்போதும் இந்த ஆதார் கார்டு அவசியமாகிறது.

பெருகும் மோசடிகள்

அதுமட்டுமல்ல, பல்வேறு மோசடிகளைக் கண்காணிக்கவும் அதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை, இன்னொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவும், மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்காகவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் உள்ளதால்தான், ஆதார் கார்டுகளை பெறும் முறைகளையும் எளிமையாக்கியுள்ளது மத்திய அரசு. எனவே, ஒவ்வொருவரும் ஆதார் அட்டையை கவனமாக வைத்திருக்க வேண்டும். அதேசமயம், ஆதார் கார்டுகள், அவருடைய ஒப்புதல் இல்லாமலேயே பல இடங்களிலும் பயன்படுத்தி மோசடி நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


உங்கள் ஆதாரை தவறாக பயன்படுத்துகிறார்களா?

ஒருவேளை உங்கள் ஆதார் கார்டினை யாராவது தவறாக பயன்படுத்துவதாக இருந்தால், அதனை நீங்கள் ஆன்லைனிலேயே எளிதில் கண்டுபிடித்துவிடலாம். இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

- UIDAI என்ற வெப்சைட்டிற்குள், ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதனை கிளிக் செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) தேர்ந்தெடுத்து, உங்களது ஆதார் நம்பரை பதிவிட வேண்டும்.

- இப்போது, "OTP -ஐ உருவாக்கு" என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, ஆதாரில் இருக்கும் மொபைலுக்கு வரும் OTP-ஐ ஆன்லைனில் கேட்கும் இடத்தில் பதிவிட வேண்டும்.

- இப்போது, ஆதார் எண்ணின் வரலாறு ஸ்கிரீனில் முழுமையாக காண்பிக்கப்படும். அதில், உங்களது ஆதாரை, யாராவது சந்தேகத்துக்குரிய வகையில் பயன்படுத்துவதை கண்டால், UIDAI - வாடிக்கையாளர் சேவை மைய எண் 1947 -ஐ தொடர்பு கொண்டுஇ, புகார் செய்யலாம். இந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.. அதேபோல, [email protected] என்ற மெயில் முகவரி வழியாகவும் புகார் செய்யலாம்.

அதேபோல உங்களது ஆதாரை ஆன்லைனிலேயே ஜூன் 14ம் தேதி வரை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.. ஆன்லைனில் my aadhaar என்ற ஆப்பில் இதனை புதுப்பித்துக் கொள்ளலாம். update document என்ற அம்சத்தை பயன்படுத்தியும் ஆதாரை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். ஆதார் மையத்திற்கு சென்று புதுப்பிக்க வேண்டுமானால் அதற்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்.

முகவரி எத்தனை முறை மாற்றலாம்

எப்போதுமே ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் நம்பர் ஆக்டிவாக இருக்க வேண்டும். இதனால் ஒருவர் சிம் கார்டுகளை மாற்றினாலும், ஆதாரிலும் செல்போன் நம்பரை அப்டேட் செய்வது அவசியமாகும். அந்தவகையில், செல்போன் நம்பரை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். அதேபோல, முகவரியையும் எத்தனை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

ஆனால், பெயர் மாற்றம் செய்யவேண்டுமானால், ஆதார் கார்டில் 2 முறை மட்டுமே செய்ய முடியும். அதேபோல, பிறந்த தேதியையும் ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+