தட்கல் டிக்கெட்டுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், வரப்போகும் சிக்கல்.. ரயில்வே கவனிக்குமா?
சென்னை: முறைகேடுகளை தடுக்க, ரயிலில் 'தட்கல்' டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் என்று ரயில்வே அமைச்சகம் அதிரடியாக அறிவித்த இந்த திட்டம் இந்த மாத இறுதியில் நடைமுறைக்கு வரப்போகிறது. தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய ஆதார் கட்டாயம் என்பதால் இன்னும் கூடுதலாக ஒரு நிமிடம் ஆகும்.இதன் காரணமாக டிக்கெட் கிடைக்காமல் போக வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில் புரோக்கர்கள் ரயில் நிலையங்களில் எந்த சரிபார்ப்பும் இல்லாமல் மொத்தமாக டிக்கெட்டை முடக்க இந்த நேரம் போதும் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
நீண்ட தூரம் பயணிக்க விரும்புவோருக்கு இந்தியாவில் ரயில் தான் முதல் விருப்பமாக உள்ளது. பேருந்துகளில் கட்டணம் அதிகமாக இருக்கும். விமானங்களில் போகவே முடியாது என்பதால், ரயிலில் செல்வதை தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் ரயிலில் டிக்கெட்டை 60 நாள் முன்பே முன்பதிவு செய்தால் தான் கிடைக்கும். அதுவுமே காலை 8 மணிக்கே ஒவ்வொரு நாளும் முன்பதிவு மின்னல் வேகத்தில் இருக்கும் என்பதால் டிக்கெட் கிடைப்பது எளிதானதாக இல்லை..

வெயிட்டிங் லிஸ்ட்
எனினும் ரயில் பயணத்துக்கு முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகவே உள்ளது. வெயிட்டிங் லிஸ்ட் இருந்தாலும் பரவாயில்லை என்றே புக்கிங் செய்கிறார்கள். அதே நேரம் அவசரமாக பயணம் செய்பவர்களுக்கு வசதியாக, ரயில்வேயில் 'தட்கல்' டிக்கெட் என்ற முறை அமலில் இருக்கிறது.
தட்கல் டிக்கெட்டுகள்
கடைசி நிமிடத்தில் பயணத்தை திட்டமிடுபவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருந்து வந்தது. சாதாரணமாக ரயில்களில் பயணிக்க, 60 நாட்களுக்கு முன்பாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்கிற நிலையில், 'தட்கல்' டிக்கெட்டுகளை, ரயில் பயணம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, முன்பதிவு செய்ய முடியும். ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் இந்த டிக்கெட்டை எடுக்க முடிகிறது.
20 சதவீதம் டிக்கெட்
மொத்தம் உள்ள டிக்கெட்டுகளில் 20 சதவீதம் 'தட்கல்' முன்பதிவுக்கு ஒதுக்கப்படுவது வழக்கமாக உள்ளது. சாதாரண கட்டணத்தை விட் தட்கல் கட்டணம் கூடுதலாக இருக்ககும். ஏ.சி. வகுப்பு தட்கல் டிக்கெட்டுகளை காலை 10 மணிக்கும், ஏ.சி. அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான டிக்கெட்டை 11 மணிக்கும் முன்பதிவு செய்ய முடியும். தட்கல் டிக்கெட்டை பொறுத்தவரை சில குளறுபடிகள், முறைகேடுகள் இருக்கிறது. தட்கலை பொறுத்தவரையில், சரியான நேரத்தில் உள்ளே சென்று, விரைவாக பணம் செலுத்தினாலும், டிக்கெட்கள் பெரும்பாலும் முன்பதிவு செய்ய முடியாது. 99 சதவீதம் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களாகவோ அல்லது டிக்கெட் இல்லாமலோ விடப்படுவது தான் நடக்கிறது.
2.5 கோடி கணக்குகள்
அதேபோல் ரயில் நிலையங்களில் போய் தட்கல் டிக்கெட் முன்பதிவு எடுப்பது என்பதும் நினைத்தே பார்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதற்கு காரணம் இடைத்தரகர்கள் ஆதிக்கம்தான். அவர்களை தாண்டி 'தட்கல்' டிக்கெட் கிடைப்பது சாமானிய மக்களுக்கு அவ்வளவு எளிது இல்லை. அதையும் மீறி காலை 10 மணிக்கு முன்பே முன்பதிவு செய்ய காத்திருந்தாலும் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேருக்கு ஐஆர்சிடிசி தளம் வேலையே செய்யாது. இது தொடர்பாக புகார்கள் பறந்த நிலையில், 'தட்கல்' டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து ஐ.ஆர்.சி.டி.சி., நீக்கியது. இந்தநிலையில், இடைத்தரகர்கள் இல்லாமல் உண்மையான பயணிகளுக்கு 'தட்கல்' டிக்கெட் கிடைக்க ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆதார் ஓடிபி
ஆதார் ஓ.டி.பி. (ஒரு முறை கடவுச்சொல்) சரிபார்க்கப்பட்ட பிறகே இனி 'தட்கல்' டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்ற நடைமுறைக்கு அமலுக்கு வருகிறது. மத்திய ரயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், ரயில்களில் 'தட்கல்' டிக்கெட் முன்பதிவு செய்ய இனி ஆதார் சரிபார்ப்பு விரைவில் கட்டாயம் ஆக்கப்பட இருக்கிறது., இந்த புதிய நடவடிக்கை மூலம் உண்மையான பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும் என்று கூறியிருந்தார்.
புதிய வசதி அறிமுகம்
தட்கல் டிக்கெட் முன்பதிவு முறைகளில் உள்ள பிரச்சினைகளை நீக்கி, முறைகேடுகளை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக, உரிய பயணிகளுக்கு நேரடியாக டிக்கெட் கிடைக்கும் என்றும், இந்த மாதம் இறுதியில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதிய சிக்கல்
அதேநேரம் தட்கல் டிக்கெட்டில் ஆதார் சரிபார்ப்பு என்பது செல்போன் மூலம் ஓ.டி.பி. பெறப்பட்டு, அதை உள்ளீடு செய்து அடுத்த நடைமுறைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்பதால், இந்த நடைமுறைக்கு கூடுதல் நேரம் பிடிக்கும் என்பதால், புரோக்கர்கள் இதனை பயன்படுத்தி டிக்கெட்டுகள் அனைத்தையும் காலி செய்ய வாய்ப்பு இருப்பதாக கவலைதெரிக்கிறார்கள். தட்கல் புக்கிங்கில் தனிநபர்களை தவிர புரோக்கர்கள் முன்பதிவு செய்ய முடியாத அளவிற்கு மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும், தட்கல் புக்கிங் என்பது தனிநபர்கள், அவர்களின் ஆதார் விவரங்களை கொடுத்து (பயணிப்பர்கள் மட்டுமே) செல்லும் வகையில் வைத்தால் தான் பிரச்சனை முடிவுக்கு வரும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications