ஆதார் - பான் இணைப்புக்கு நாளைதான் கடைசி நாள்.. மிஸ் பண்ணினால் அடுத்து இதுதான் நடக்கும்? உஷார்
சென்னை: பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க நாளைதான் (டிசம்பர் 31) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் என்ன நடக்கும்? பான் கார்டு செயலற்றதாகிவிடுமா? மீண்டும் அதை எப்படி செயல்பாட்டிற்கு கொண்டு வருவது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
இந்திய வருமான வரித்துறையால் பான் கார்டு வழங்கப்படுகிறது. 10 இலக்க எண் கொண்ட பான் கார்டில் ஒருவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வழங்கப்பட்டு இருக்கும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவும், வங்கிகளில் பெரிய அளவிலான பரிமாற்றங்கள் செய்யவும் பான் கார்டு அத்தியாவசியமாக உள்ளது.

ஆதார் பான் இணைப்பு
ஒருவரின் நிதி பரிமாற்றங்களை கண்காணிக்கும் ஒரு அடையாள எண்ணாக பான் கார்டுகள் உள்ளன. வங்கிகளிலும் பான் கார்டு அவசியம் இணைக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆதார் கார்டுடன் பான் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2023 வரை பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க எந்தக் கட்டணமும் நிர்ணயிக்கப்படவில்லை. அதன்பிறகு இணைக்க ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
நாளை தான் கடைசி நாள்
இந்த சூழலில்தான், பான் - ஆதார் எண்ணை வரும் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 31ஆம் தேதிக்குள் இணைக்க தவறினால், வருமான வரி செலுத்துதல், பண பரிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது எனவும், அதிகப்படியான TDS/TCS பிடித்தம், 15G மற்றும் 15H படிவங்கள் நிராகரிப்பு, வங்கி சேவை நிறுத்தம் ஆகியவற்றை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பான் எண் செயலிழந்துவிடுமா?
பான் கார்டு - ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் இனி இணைக்க முடியாதா, அந்த பான் எண் செயலிழந்துவிடுமா? என்ற கேள்வி எழக்கூடும். 31ஆம் தேதிக்கு பிறகு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் என்ன ஆகும் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
டிசம்பர் 31 ஆம் தேதி வரை உங்கள் பான் எண்ணை இணைக்காவிட்டால், ஜனவரி 1, 2026க்கு பிறகு உங்கள் பான் எண் செயலிழந்ததாகக் கருதப்படும். இது மிகப்பெரிய நிதி சிக்கலை ஏற்படுத்தும். வரி தாக்கல் மட்டுமின்றி சில நிதி பரிவர்த்தனைகளுக்கும் இடையூறு ஏற்படக்கூடும்.
ரூ.1,000 செலுத்தி ஆக்டிவேட் செய்ய வேண்டும்
அதேநேரத்தில், உங்கள் பான் எண்ணை எப்போது வேண்டுமானாலும் உடனடியாக செயல்பாட்டுக்கு (reactivate) கொண்டு வர முடியும். அதாவது, காலதாமதத்திற்கான ரூ.1,000 (தற்போதைய நிலவரப்படி) கட்டணம் செலுத்தி ஆக்டிவேட் செய்ய முடியும். ஆதாருடன் இணைக்காவிட்டாலும் உங்கள் பான் எண் ரத்தானதாகக் கருதப்படாது. ஆனால், அதை ரீ-ஆக்டிவேட் செய்யும் வரை பான் எண்ணை பயன்படுத்துவதில் எந்தப் பயனும் இல்லை.
செயல்பாட்டில் இல்லாததாகவே கருதப்படும்
எனவே, சோம்பல் படாமல் ஆதார் - பான் இணைப்பை செய்துவிடுவது நல்லது என்று நிதி சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அதேநேரத்தில், ஆதாரில் இருக்கும் பெயர், வயது உள்ளிட்டவை பான் எண்ணுடன் மாறுபட்டு இருந்தால், அதை இணைப்பதில் சிரமம் இருக்கும். அப்படி மிஸ்மேட்ச் இருப்பவர்கள் அதை உடனடியாக சரி செய்து ஆதார் - பான் இணைப்பை மேற்கொள்ள வேண்டும்.
இல்லையென்றால், பான் எண் செயல்பாட்டில் இல்லாததாகவே கருதப்படும். 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதிக்கு பிறகு பான் கார்டு வாங்கியவர்கள் டிசம்பர் 31 (நாளை) வரை ஆதார் எண்ணுடன் இணைக்க கட்டணம் இல்லை. இலவசமாகவே இணைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications