இதுதான் முக்கியம், உடனே முடிங்க..வாக்காளர் அடையாள அட்டை குறித்து.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை: இ - சேவை மையங்களில் வாக்காளர் அட்டை வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது என்றும், நேரடியாக வீடுகளுக்கே விநியோகம் செய்யப்படுவதாகவும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாக்காளர் அடையாள அட்டை குறித்து பல்வேறு தகவல்களை எடுத்துரைத்தார்.
செய்தியாளர்களிடம் அவர் சொன்னபோது, "வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான காலகட்டத்தை ஓராண்டுக்கு தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.
முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடந்து வந்தது... இப்போது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.... அந்தவகையில், இப்போதைய ஆண்டில் 4 காலாண்டிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவை நடைபெற்று வருகிறது.

வாக்காளர் அட்டை: வாக்காளர் அட்டையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் ஒரே மாதிரியான அட்டை அச்சிடப்படுகிறது..
அதனால், புதிய வாக்காளர்கள் அனைவருக்கும், தேர்தல் கமிஷன் நியமித்துள்ள நிறுவனம் சார்பில், வாக்காளர் அச்சிடப்பட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் தபாலில் வாக்காளர்கள் வீடுகளுக்கு அனுப்புவார்கள்.. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வழியாக வினியோகிப்பதும் பல்வேறு புகார்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னதாக வாக்காளர் அடையாள அட்டைகள், அரசின் இ-சேவை மையங்கள் மற்றும் இணைய சேவை மையங்களில் பெறும் வசதி இருந்தது. இப்போது புதிய அட்டைகள் பாதுகாப்பு அம்சங்களுடன் வழங்கப்படும் நிலையில், இணைய மையங்களில் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல போலி அட்டைகளை தடுக்கும் வகையில், இந்த புதிய அட்டைகளின் உட்புறத்தில் ஹோலோகிராம், கோஸ்ட் இமேஜ் என்ற நவீன வசதி, க்யூஆர் கோடு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த அட்டைகளை இ-சேவை மையங்களால் அச்சிட்டு வழங்க இயலாது என்பதால், தேர்தல் ஆணையமே நேரடியாக வழங்க முடிவெடுத்துள்ளது.
முன்னுரிமை: வாக்காளர் அடையாள அட்டையைப் பெற தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். புதிய வாக்காளர்கள், முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை திருத்தம் செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அட்டை விநியோகிக்கப்படுகிறது. புதிய அட்டை கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு தேவை அடிப்படையில் விநியோகிக்கப்படுகிறது. அட்டையை தொலைத்தவர்களும் விண்ணப்பிக்கலாம்... புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications