ஆதார் கார்டு உங்க கிட்ட இருக்குதுல்ல.. அதுல ஈஸியா திருத்தம் செய்யலாம்.. ஆனா ஒரு விஷயம்.. இதை படிங்க
சென்னை: ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் செய்யலாம் என்பது தெரியும்.. ஆனால் ஒருவர் எத்தனை முறை, தங்களுடைய ஆதார் கார்டில் திருத்தங்கள் செய்யலாம் என்பது தெரியுமா?
ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு கார்களை பெறும் முறைகளையும் எளிமையாக்கியுள்ளது மத்தியஅரசு. அந்த அளவுக்கு ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது.
ஆதார் கார்டு பயன்கள்: இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல.. மக்கள் நலத் திட்டங்களில் உதவிகளை பெறுவதற்குக்கும் ஆதார் அவசியம். சிம் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆதாரை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ள நிலையில், ரேஷன் கார்டிலும் ஆதாரை இணைத்தாக வேண்டும்.

ஆதார் கார்டு பல்வேறு மோசடிகளைக் கண்காணிக்கவும் அதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை, இன்னொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இருந்தால் மட்டுமே ரேஷன் உதவிகளைப் பெறமுடியும். இதில் ஆதார் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஒரே நாடு ஒரே ரேஷன்: ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் வாங்கிக் கொள்ளலாம்... அதுவும் இல்லாமல், 1000 ரூபாய் உரிமைத்தொகையை வழங்க திமுக அரசு தயாராகி வருகிறது.. மகளிர் உரிமைத்தொகை மட்டுமல்லாமல் பொங்கல் பரிசுத்தொகுப்பு போன்ற உதவிகளும் இந்த ரேஷன் கார்டுகள் மூலம்தான் கிடைக்கின்றன.
இணைப்பு கட்டாயம்: அதனால்தான், ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஆதார் அட்டையில் தேவையான மாற்றங்களை செய்ய அனுமதிக்கிறது என்றாலும், அதற்கும் ஒரு அளவுகோல் விதிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையை மாற்றுவதற்கும்சரி, அதை திருத்துவதற்கும் சரி, யுஐடிஏஐ ஒரு வரம்பை நிர்ணயித்துள்ளது.. அந்த வரம்பை மீறி யாருமே செயல்படவும் முடியாது.
காரணங்கள்: எந்தெந்த காரணத்துக்காக, திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி வரும் என்றால், ஒருவர் தன்னுடைய பணி நிமித்தம் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ பலமுறை வீட்டை மாற்ற வேண்டிய மாற்ற வேண்டி வரலாம். அதுபோன்ற சூழ்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள தங்கள் முகவரியை மாற்ற வேண்டியது வரும்.
அதேசமயம் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள அட்ரஸில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், அதனை ஒருமுறை மட்டுமே அட்ரஸ் மாற்ற முடியும்.. அதற்காக, ஆதார் அட்டையில் மறுபடியும் மறுபடியும் மாற்றத்தை செய்துகொண்டே இருக்க முடியாது..
அனுமதி: சிலருக்கு ஆதார் அட்டையிலுள்ள பெயர் தவறாக இருக்கலாம்.. கல்யாணத்துக்கு பிறகு, பெண்கள் தங்கள் ஆதாரில் குடும்ப பெயரை மாற்ற வேண்டிய நிலைமை வரலாம்.. அப்படியிருக்கும்போது, ஆதாரில் உள்ள பெயரை 2 முறை மட்டுமே திருத்தலாம் அல்லது அப்டேட் செய்யலாம். 2 தடவைக்கு மேல், பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால் யுஐடிஏஐ-ன் பிராந்திய அலுவலகத்திற்கு சென்று அங்கு சில முக்கிய ஆவணங்களை இதற்காக பிரத்யேகமாக சமர்ப்பிக்க வேண்டும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications