இந்த கட்சி லிஸ்ட்லயே இல்லை.. 10 சதவீதம் ஓட்டு வாங்கப்போறதே அவுங்ககிட்ட இருந்துதான்-ஆதவ் அர்ஜுனா
சென்னை: காங்கிரஸ் கட்சியின் 10% வாக்குகள் தவெகவுக்கு வந்துவிட்டது என்று அக்கட்சியின் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். திமுக உடனான கூட்டணியை ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் விரும்பவில்லை என்று கூறிய ஆதவ் அர்ஜுனா, திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் தொண்டர்கள் தவெக பக்கம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது, உண்மையான காங்கிரஸ் கட்சியினர் தவெக பக்கம் இருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியை முதல்வர் ஸ்டாலின் கோடிகளை கொடுத்து வாங்கிவிட்டதாக விமர்சித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் அமைதி காத்து வருகின்றனர். மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோரும் அமைதியாகவே இருக்கிறார்கள்.

இதுதொடர்பாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசுகையில், தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றாரோ, அன்றே காங்கிரஸ் கட்சியை திமுகவிடம் அடமானம் வைத்துவிட்டார். அடமானம் வைக்க எவ்வளவு வாங்கினார் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். ஜோதிமணி ராகுல் காந்தியின் தீவிர விஸ்வாசி.
மாணிக்கம் தாகூர் ராகுல் காந்தியின் வலதுகரத்தை போன்றவர். அவரும் சொல்லிவிட்டார்.. தமிழக காங்கிரஸ் தலைமை, காங்கிரஸ் கட்சியின் குரலாக இல்லை. அதனால் பணி செய்யப் போவதில்லை என்று கூறிவிட்டார். திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்ய காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகையும், ப.சிதம்பரமும் என்னவெல்லாம் செய்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.
ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியின் இலக்கும் காமராசரின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதுதான். கொள்கை இல்லாத ஒரு கூட்டணியை செல்வப்பெருந்தகை ஒரு சுயநலத்திற்காக உருவாக்கி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் 10% வாக்குகள் தவெகவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். முன்னாள் எம்பி, முன்னாள் எம்எல்ஏ-க்கள் பலரும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட நிர்வாகிகளும் தவெகவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். செல்வப்பெருந்தகையை தமிழ்நாடு முழுவதும் பலருக்கும் தெரியாது. இப்போது தெரிய ஒரே காரணம், திமுகவிடம் பின்வாசல் வழியாக எவ்வளவு வாங்கிவிட்டு கூட்டணி அமைத்தார் என்ற பேச்சால் தான். இதனை நாங்கள் சொல்லவில்லை. காங்கிரஸ் கட்சியினரே பேசுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
-
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
எம்ஜிஆர், ஜெயலலிதா போலவே விஜய்யும்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் என்ன ஸ்பெஷல்? -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
அரசு மருத்துவமனைகளில் புரட்சி.. இனி மொபைல் ஆப் மூலம் டோக்கன் முன்பதிவு.. விஜய் அரசின் புதிய முடிவு! -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications