Aadhav Arjuna: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தமிழ் வழியில் கல்வி பயின்றவரா? உண்மை என்ன!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்மையில் தனியார் தொலைக்காட்சி மேடையில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசுகையில், தாம் அரசுப் பள்ளியில் படித்ததாகவும், அரசுப் பள்ளியில் படித்ததால் ஆங்கிலம் பேசுவதற்கு கஷ்டப்படுவதாகவும் பேசி இருந்தார். இதனிடையே ஆதவ் அர்ஜுனா அரசுப் பள்ளியில் படிக்கவில்லை என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

அண்மையில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பிபிசி தமிழ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அப்போது தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்துவிட்டது என்று விமர்சித்தார். அதற்கு கூட்டத்தில் அமர்ந்திருந்த இளைஞர்கள், நீங்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் பலரும் தொழிலாளியாக மட்டுமே செல்கிறார்கள்.

Aadhav Arjuna

பெண்கள் கல்வியில் முன்னேறவில்லை என்றெல்லாம் கூறுகிறீர்கள்.. ஆனால் மத்திய அரசு அறிக்கையின்படி மகளிர் கல்வியில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது.. அதேபோல் ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் 448 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மற்ற மாநிலங்களில் இருந்து இந்த அளவிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் யாரும் ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

இப்படி எல்லாவற்றிலும் முன்னேறி வரும் போது, உங்களின் குற்றச்சாட்டு நியாயமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஆதவ் அர்ஜுனா, நீங்கள் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்தவர். ஆனால் நான் தமிழ் வழிக் கல்வியில் படித்தவன்.. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு ஆங்கிலம் இன்னும் பேசுவதற்கு கடினமாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அதேபோல் ஆதவ் அர்ஜுனா தாம் தமிழ் வழிக் கல்வியில் பயின்றதாக கூறி இருக்கிறார். இதுகுறித்து ஆதவ் அர்ஜுனாவின் இணையதளத்தில் சென்று பார்த்த போது, ஆதவ் அர்ஜுனா 10வது வரை YWCA மெட்ரிக்குலேசன் பள்ளியில் தான் கல்வி பயின்று இருக்கிறார். தொடர்ந்து சென்னை எம்சிசி கல்லூரியில் படித்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+