“முடிந்தால் என் மீது கை வையுங்கள்..” கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா.. தவெகவினர் மீதான தாக்குதலால் பரபரப்பு
சென்னை: பாரிமுனையில் தவெகவினர் மீதான தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்தார். இதுபோன்ற தாக்குதலை அனுமதிக்கக்கூடாது என்ற அவர், முடிந்தால் தன் மீது கைவைக்கட்டும் எனச் சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் பாரிமுனைப் பகுதியில் தவெக நிர்வாகிகள் சிலர் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த திமுகவினருக்கும் தவெகவினருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.. அதில் தவெக நிர்வாகிகள் காயமடைந்துள்ளனர். தவெகவை சேர்ந்த நான்கு மாதக் கர்ப்பிணிப் பெண்ணும் இதில் காயமடைந்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா
கர்ப்பிணிப் பெண் உட்படக் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே அவர்களை தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, தவெகவினர் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடந்துள்ளதாகவும் முடிந்தால் தன் மீது கை வைத்துப் பார்க்கட்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "அமைதியான முறையில் தேர்தல் வேலைக்காக மக்களை தவெகவினர் சந்தித்து வந்தனர். இன்னும் பரப்புரையை ஆரம்பிக்கக் கூட இல்லை. சந்திப்பதே தவறு என்கிறார்கள். இதற்கே திமுகவுக்குப் பயம் வந்துவிட்டது. முக்கியமாக இங்கு இருக்கும் அமைச்சர். அந்தளவுக்குப் பயக்கிறார் என்றார் தொகுதியின் நிலைமை என்ன என்பது அனைவருக்கும் புரியும்.
மக்கள் செல்வாக்கை இழந்தவர்கள்
மக்கள் செல்வாக்கை இழந்தவர்கள் தான் வன்முறையை கையில் எடுப்பார்கள். மக்கள் செல்வாக்கை இழந்தவர்கள் தான் காசை நம்புவார்கள். மக்கள் செல்வாக்கை இழந்தவர்கள் தான் ரவுடிசத்தை கையில் எடுப்பார்கள். இதுபோன்ற சம்பவங்கள் எங்களைப் பாதிக்காது. நாங்கள் மக்களுடைய வீட்டுக்கு இன்னும் தைரியமாகப் போவோம். தலைவர் கிட்டப் பேசிவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்.
இதே நிர்வாகிகளுடன் வீடு வீடாகச் செல்வோம். முடிந்தால் சேகர்பாபுவை என் மீது கை வைக்கச் சொல்லுங்கள். முடிந்தால் என் சட்ட மேல் கை வைக்க சொல்லுங்க. நாங்கள் ரொம்ப அமைதியாக அறவழியில் இருக்கிறோம். இந்த ஆட்சியை மாற்றி மக்களுக்கு நல்லது செய்ய வந்திருக்கிறோம். ஆனால், திரும்பத் திரும்ப கை வைத்தால் இளைஞர் படை உங்கள் வீடு தேடி வரும். அதை மட்டும் மறந்துவிடாதீர்கள். அகிம்சை வழியில் பதிலடி கொடுப்போம்.
முடிந்தால் கை வையுங்கள்
இத்தனை காலம் சென்னையில், குறிப்பாக வடசென்னையில் ரவுடிசம் மட்டுமே செய்து தேர்தலில் வென்ற காலம் எல்லாம் போய்விட்டது.. இனிமேல் மக்கள் ஆதரவும் இளைஞர் ஆதரவும் தேர்தல் அரசியல் வரலாற்றை மாற்றும். நாங்கள் வருவோம். வீடு வீடாக வருவோம். முடிந்தால் எங்கள் சட்டை மேல் கை வைங்க. அதன் பிறகு பேசிக்கலாம்.
அவர்கள் தாக்கினால் தாக்கட்டும். நாங்கள் அடி வாங்கினாலும் மக்கள் ஆதரவு எங்களுக்கு வரும். பெண்களுக்கான ஆட்சி என முதல்வர் சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஆனால், ஒரு கர்ப்பிணிப் பெண்ணையே தாக்கி மருத்துவமனையில் சேர்க்கும் நிலைக்குத் தள்ளியுள்ளனர். முதலமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? இந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள். முதல்வர் பதில் சொல்வாரா? இல்லை திமுகவில் யார் பதில் சொல்லப் போகிறார்கள்?
முதல்வர் என்ன சொல்லப் போகிறார்
அந்தக் கர்ப்பிணிப் பெண்ணை வந்து யார் பார்க்கப் போகிறார்கள்? 4 மாதக் கர்ப்பிணிப் பெண்ணை தாக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் இன்னும் முதல் தகவல் அறிக்கை கூட தாக்கல் செய்யவில்லை. எஃப்ஐஆர் போட்டு சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்திருக்க வேண்டாமா.. ஒரு வீட்டிற்குப் பிரச்சாரத்திற்குப் போவது எந்த விதத்தில் தவறு?
வன்முறையை மட்டுமே வைத்து திமுக வடசென்னையில் வென்று வருகிறது. இந்த அரசியலை நாங்கள் ஒழிப்போம். நியாயமான அகிம்சையான ஒரு ஒரு தேர்தலை மக்களிடம் கொண்டு செல்வோம். காயமடைந்த 5 பேரில் இருவர் சிறுபான்மை சகோதரர்கள். சிறுபான்மையினரின் பாதுகாவலன் எனச் சொல்லிவிட்டு, முஸ்லிம் தோழர்களை அடித்துள்ளனர். இதற்கு எல்லாம் யார் பதில் சொல்லப் போகிறார்கள்" என்றார்.
-
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications