நாளை ஆடிப்பெருக்கு: பத்திரப் பதிவு நடக்குமா?.. நடைபெறாதா?.. வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: நல்ல நாட்கள், சுபமுகூர்த்த நாட்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டு பத்திரப் பதிவு நடைபெறுவது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் சொத்துகள் வாங்குவது, பதிவு செய்வது போன்ற காரியங்கள் செய்தால் சொத்துகள் பெருக்கமடையும் என்று நம்பப்படுதால் பொதுமக்கள் அன்றைய தினம் அதிக அளவில் பத்திரப் பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில், ஆகஸ்ட் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆடிப்பெருக்கு தினத்தில் பத்திரப் பதிவு நடைபெறுவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுபமுகூர்த்தம்
தமிழகத்தில் இடம், வீடு, நிலம் போன்றவற்றை வாங்குபவர்கள் அதற்கான பத்திரங்களை நல்ல நாட்கள் பார்த்து பதிவு செய்வது வழக்கம். சுபமுகூர்த்த நாட்கள், நல்ல நாட்களில் அதிகளவு பத்திரப் பதிவுகள் நடைபெறும். இதனால், சுபமுகூர்த்த நாட்களில் பத்திரப் பதிவு அலுவலகங்களை திறக்க திட்டமிடப்படிருந்தது. அந்த வகையில், சுபமுகூர்த்த தின நாட்களில் பொதுமக்களின் வசதிக்காக பத்திரப் பதிவு செய்ய கூடுதல் டோக்கன்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு அதிக அளகளவிலான வருவாய் கிடைப்பதுடன், பொதுமக்கள் விருப்பப்பட்ட நாட்களிலும் பத்திரப் பதிவு செய்யப்படுகிறது.
ஆடி மாதம்
பொதுவாக ஆடி மாதத்தில் எந்தவொரு நல்ல காரியங்களும் செய்யப்படுவதில்லை. திருமணம், இடம், நிலம், வீடு பத்திரப் பதிவு செய்வது, வேறு இடத்துக்கு குடிபெயர்வது போன்ற எந்தவொரு நல்ல காரியங்களும் செய்யப்படாது. ஆனால், ஆடிப்பெருக்கு தினம் மிகவும் நல்ல நாளாகக் கருதப்படுகிறது. ஆடிப்பெருக்கு நாளன்று எந்தவொரு நற்காரியத்தை செய்தாலும் அது பெருக்கச் செய்யும் என்பது நம்பிக்கை.
ஆடிப்பெருக்கில் பத்திரப் பதிவு
ஆடி மாதத்தில் பொதுவாக பத்திரப் பதிவுகள் குறைவாக இருக்கும் என்றாலும் ஆடிப்பெருக்கு தினத்தன்று (ஆகஸ்டு 3 ஆம் தேதி) மிகுந்த நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும். மற்ற நாட்களில் கிடைக்கும் பத்திரப் பதிவு வருமானத்தை விட ஆடிப்பெருக்கன்று நடக்கும் பத்திரப் பதிவின் வருமானம் அதிகமாக இருக்கும்.
டோக்கன்கள்
ஆனால், நடப்பு ஆண்டில் ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அரசு அலுவலர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பத்திரப் பதிவுகள் நடைபெறாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுபமுகூர்த்த நாட்கள், நல்ல நாட்கள் போன்றவற்றில் அதிக அளவிலான பத்திரப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம். இதனால், அந்த நாட்களில் பத்திரப் பதிவு அலுவலகங்களை திறந்து கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.
நாளை பத்திரப் பதிவு நடக்குமா?
ஆனால், கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முகூர்த்த நாளன்று பத்திரப் பதிவு அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும், பொதுமக்கள் அன்றைய தினம் பத்திரப் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அன்றைய தினம் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.
எனவே, ஞாயிற்றுக்கிழமைகளில் பத்திரப் பதிவு செய்ய வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஆடிப்பெருக்கு நாளன்று பத்திரப் பதிவுகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications