"பன்றியுடன் சண்டையிடாதே!" ஆர்த்தி ரவி போட்ட கிரிப்டிக் போஸ்ட்! யாரை சொல்கிறார் கெனிஷாவையா?
சென்னை: பன்றியுடன் சண்டையிடாதே என யார் பெயரையும் குறிப்பிடாமல் ஆர்த்தி ரவி இன்ஸ்டா ஸ்டோரி வைத்திருந்தார். அவர் யாரை குறிப்பிடுகிறார் என சமூகவலைதளத்தில் விவாதங்கள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து ஆர்த்தி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கூறியிருப்பதாவது: "ஒரு தெரபிஸ்ட் சொன்னது: பன்றியுடன் சண்டையிடாதே... நீயும், பன்றியும் சேற்றில் சிக்கிவிடுவீர்கள். ஆனால் அந்த சேற்றை ரசிப்பது என்னமோ பன்றிதான்" என்று ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவில் ஆர்த்தி, ரவிமோகனையும் கெனிஷாவையும் மறைமுகமாக விமர்சித்திருப்பதாகவே பலர் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். ஆர்த்தி ரவியும், ரவி மோகனும் ஒருவரையொருவர் விமர்சிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஆர்த்தி, யார் பெயரையும் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளதாகவே சொல்லப்படுகிறது.
கெனிஷா கர்ப்பமாக இருப்பதாக சமூகவலைதளத்தில் உண்மைக்கு புறம்பாக செய்திகள் வந்தன. ஆனால் இதை கெனிஷா மறுத்து, அதெல்லாம் பொய் என கூறியிருந்தார்.
நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஆர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் திருமணம் நிகழ்ச்சி ஒன்றில் பாடகி கெனிஷா உடன் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இது சம்பந்தமாக ஆர்த்தி காட்டமான அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்து நடிகர் ரவி மோகனும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்தப் பின்னணியில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க மனைவி ஆர்த்திக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடிகர் ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், இரு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்றும் இருதரப்பும் ஏற்கனவே பதிவு செய்த பதிவுகளை நீக்கி விடுவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இருவர் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இரு தரப்பினரும் அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் ஏற்கனவே பொதுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை நீக்க வேண்டுமென இருதரப்பினருக்கும் அறிவுறுத்திய நீதிபதி, நடிகர் ரவி மோகன் ஆர்த்தி தம்பதியர் குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications