பொறியில் சிக்கிய ஆருத்ரா புள்ளி.. "சிங்கம் 2" பாணியில் பறக்கும் போலீஸ்! தொடங்கிய ஆபரேஷன்! அப்போ பாஜக
சென்னை: ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் முக்கியமான புள்ளி ஒருவரை கைது செய்ய தமிழ்நாடு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஆருத்ரா நிறுவன மோசடி தேசிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது. வேலூரை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவர்களுக்கு கிளை இருந்தது.

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் தருவோம். 10 மாதம் இந்த பணத்தை தருவோம். உங்களுக்கு 3.6 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி முதலீடு செய்த மக்களை அந்த நிறுவனம் கடைசியில் ஏமாற்றி உள்ளது. இந்த நிலையில்தான் ஆருத்ரா நிறுவன இயக்குனர் ஹாரிஸுக்கு கட்சியில் பதவி கொடுத்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
பாஜக நெருக்கம்: இதில் பாஜகவினர் பலரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. முக்கியமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிக நெருக்கமாக இருக்கும் பல தலைவர்களின் பெயர்களும் அடிபட்டு வருகின்றன.
ஆர்.கே சுரேஷ் போன்றவர்கள் அண்ணாமலைக்கு மிக நெருக்கமானவர்கள். இவர்கள் தற்போது தமிழ்நாடு குற்றப்பிரிவு போலீசார் மூலம் குறி வைக்கப்பட்டு உள்ளனர். வேலூரை தலைமையிடமாக கொண்டு ஆருத்ரா நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவர்களுக்கு கிளை இருந்தது.
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் தருவோம். 10 மாதம் இந்த பணத்தை தருவோம். உங்களுக்கு 3.6 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர்.
இந்த நிலையில்தான் IFS, ஆருத்ரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்காததால், கடன் தொல்லை காரணமாக ராஜி என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் ஸ்டாலின் விரைவில் சாட்டையை சுழற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் அடுத்தடுத்து குறி வைக்கப்பட்டு உள்ள நிலையில் அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர்களையும், ஆருத்ராவில் தொடர்புடைய பாஜக தலைவர்களையும் குறி வைக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முக்கியமாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் ஆருத்ரா விவகாரத்தில் தமிழ்நாடு போலீசும் சாட்டையை சுழற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துபாய் செல்கிறது: இந்த நிலையில்தான் ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் முக்கியமான புள்ளி ஒருவரை கைது செய்ய தமிழ்நாடு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி ஆருத்ரா இயக்குனரை கைது செய்ய துபாய் செல்ல உள்ளனர்.
சிங்கம் பட பாணியில் துபாய் சென்று இவர்கள் கைது நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர். துபாயில்தான் ஆருத்ரா இயக்குனர் ராஜசேகர், அவரின் மனைவி உஷா, மற்றும் சிலர் தலைமறைவாகி இருக்கின்றனர்.இவர்களை கைது செய்ய துபாய் நாட்டுடன் பரஸ்பர ஒப்பந்தம் செய்து துபாய்க்கு செல்ல தமிழ்நாடு போலீஸ் முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கை பாஜகவிற்கு பிரஷர் கொடுக்கும் என்கிறார்கள். தற்போது நடக்கும் நிகழ்வுகளால் திமுக நிர்வாகிகள் பலரும் அப்செட் ஆகி இருக்கிறார்களாம். நாம்தான் ஆளும் கட்சி. ஆனால் அதிமுகவினர் நிம்மதியாக இருக்கிறார்கள். ஆனால் நாமோ தினமும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கிறோம் என்று ஸ்டாலினிடம் மூத்த நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனராம். இதனால் விரைவில் ஸ்டாலின் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications