ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு.. சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக சென்னை முகப்பேர் கிழக்கு, மடிப்பாக்கம், பூந்தமல்லி உள்பட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. பொதுமக்களிடம் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளனர், அந்த பணத்தை எந்தெந்த நாடுகளுக்கு சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்துள்ளனர் என்பது தொடர்பாக சோதனை நடப்பதாக தெரிகிறது.
அதிக வட்டி தருவதாக கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ.2,400 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக, சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வந்த ஆருத்ரா நிறுவனம் மீது புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த 2020 - 2022 ஆம் ஆண்டுகளில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஆருத்ரா நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய பாஸ்கர், மோகன் குமார், செந்தில் குமார், மைக்கேல் ராஜ், ஹரி, கூடுதல் இயக்குநர்களான மாலதி, செந்தாமரை, நாகராஜ், பேச்சிமுத்துராஜா, உதயகுமார், அசோக்குமார் ராஜா உள்ளிட்டோரும், அந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜசேகர் என்பவரையும் துபாயில் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை ரொக்கமாக ரூ.60 கோடியும், தங்க நகை 3,716 கிராம், வெள்ளி பொருட்கள் 5,007 கிராம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. அதேபோல் வங்கியில் இருந்த ரூ.102 கோடி முடக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை இன்று சோதனை மேற்கொண்டுள்ளது. சென்னை மடிப்பாக்கம், முகப்பேர் கிழக்கு, பூந்தமல்லி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களிடம் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளனர், அந்த பணத்தை எந்தெந்த நாடுகளுக்கு சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்துள்ளனர் என்பது குறித்து சோதனை முடிவில் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications