Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரும் பரபரப்பு! தலைமறைவாக இருந்த ஆருத்ரா நிறுவன இயக்குநர் தீபக் பிரசாத் அதிரடி கைது.. தீவிர விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆருத்ரா கோல்டு முறைகேடு விசாரணை சூடு பிடித்துள்ள நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான தீபக் பிரசாத் என்பவரை போலீசார் இப்போது கைது செய்துள்ளனர்.

குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரிடம் விருப்பமாக இருக்கிறது. பொதுமக்களின் இந்த ஆசையைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் மோசடி செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

அப்படி நடந்த ஒரு சம்பவம் தான் ஆருத்ரா நிறுவனத்தின் மோசடி சம்பவம். சில மாதங்களுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தன.

 Aarudra Gold director Deepak Prasad arrested by the Economic Offenses Division

ஆருத்ரா மோசடி: அதன் தலைமையகம் சென்னை அமைந்தகரையில் அமைந்திருந்தது. ஆருத்ரா கோல்டு நிறுவனம் தங்க நகைக் கடன் கொடுத்து வந்த நிலையில், புதிதாக ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து விளம்பரப்படுத்தினர். தங்கள் நிறுவனத்தின் முதலீடு செய்தால் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரப்படுத்தினர். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பலரும் ஆர்வமாக முதலீடு செய்தனர்.

தமிழ்நாடு முழுக்க இதற்காகப் பல இடங்களில் ஆபீசையும் தொடங்கினர். இவர்களை நம்பி பல ஆயிரம் பேர் ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்தனர். சில மாதங்கள் சொன்னபடி வட்டியைத் தர மேலும் பலர் முதலீடு செய்தனர். முறையாக வட்டி வந்ததால் யாரும் எதுவும் கேட்கவில்லை. இருப்பினும், சில மாதங்களில் வட்டியைச் சொன்னபடி தராமல் இழுத்தடித்துள்ளனர். இவர்கள் பொதுமக்களிடம் இருந்து மட்டும் சுமார் 2400 கோடி ரூபாயை வாங்கியுள்ளனர்.

வட்டி வரத் தாமதம் ஆன போது, சிலர் பணத்தை எடுக்க முயன்றுள்ளனர். இருப்பினும், பணத்தை எடுக்கவும் அவர்களை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதன் பின்னரே அவர்கள் மக்களிடம் இருந்து வசூலித்த பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், விசாரணையை ஆரம்பித்தனர். அதன்படி ஆருத்ரா இயக்குநர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா என்ற பெயரில் செயல்பட்ட 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இயக்குநர் கைது: இந்த வழக்கில் சமீபத்தில் தான் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தனர். ரூ.2438 கோடி தொடர்புடைய ஆருத்ரா கோல்டு லோன் மோசடி வழக்கில் 3000 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் இப்போது அந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான தீபக் பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தனை காலம் தலைமறைவாக இருந்த தீபக் பிரசாத்தை இன்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தீபக் பிரசாத் இப்போது அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, இந்த வழக்கில் பாஜக நிர்வாகியும் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநருமான ஹரிஷ் என்பவர் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதில் பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆகே சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

அதிர்ச்சி தகவல்கள்: முன்னதாக ஹரிஷ் கைது செய்யப்பட்ட போது, அவர் அளித்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. அதாவது தமிழ்நாடு பாஜகவில் பொறுப்பைப் பெற முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த பணத்தைப் பயன்படுத்தியாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில், 22 கார்கள், ₹96 கோடி டெபாசிட், ₹103 கோடி மதிப்புள்ள சொத்துகளைப் பொருளாதார குற்றப்பிரிவினர் முடக்கியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+