என்னங்க இந்த பகுதிகளில் எல்லாம் பால் வரலையா? லேட் ஆகுமாம்! ஆவின் நிர்வாகம் அறிவிப்பு
சென்னை: சென்னையில் சில இடங்களில் சில மணி நேரம் ஆவின் பால் விநியோகம் தாமதம் ஏற்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை முழுவதும் மக்கள் விரும்பி வாங்கும் ஆவின் பால் பெரம்பூர், அண்ணாநகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் பால் விநியோகம் ஒரு சில மணி நேரம் தாமதமாகும்.

ஆவின் நிர்வாகம் பல்வேறு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து இடங்களிலும் சீரான பால் விநியோகத்தை உறுதிசெய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இருப்பினும் இத்தகைய காலதாமதத்திற்கு வருந்துவதாகவும், இந்த சூழலில் ஆவின் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் ஆவின் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் அண்மைக்காலமாக தாமதமாகி வருகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆவின் பாலில் புழுக்கள் இருப்பதாகவும் புகார்கள் அவ்வப்போது எழுவது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications