சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆவினை தூக்கிவிடும் தமிழக அரசு.. கொடுத்த பல்க் ஆர்டர்.. பொங்கலுக்கு வீடு தேடி வரப்போகும் ஆவின் நெய்!

Google Oneindia Tamil News

சென்னை:பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

தெளிய விட்டு தெளிய விட்டு தாக்கும் மழை...காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு அதிகனமழைதெளிய விட்டு தெளிய விட்டு தாக்கும் மழை...காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு அதிகனமழை

பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய 20 பொருட்கள் வழங்கப்படுகின்றன. 1,088 கோடி ரூபாய் செலவில் இது வழங்கப்படுகிறது.

ஆவின் நெய்

ஆவின் நெய்

இதேபோல் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவித்த தொகுப்பில் ஆவின் நெய் இடம் பெற்றதை ஆவின் நிர்வாகம் வரவேற்றுள்ளது.

வளர்ச்சிப் பாதையில் ஆவின்

வளர்ச்சிப் பாதையில் ஆவின்

இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வர் தமிழக மக்களின் தேவை அறிந்து அரசின் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அவரின் உத்தரவுப்படியும், பால்வளத்துறை அமைச்சர் ஆலோசனைப்படியும் ஆவின் நிறுவனமானது வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 2022ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை அறிவித்தார்.

2 கோடியே 15 லட்சம் நெய் பாட்டில்கள்

2 கோடியே 15 லட்சம் நெய் பாட்டில்கள்

அதில் ஆவின் சார்பாகத் தயார் செய்யப்படும் நெய்யும் இடம் பெற்றுள்ளது என்பது வரவேற்கத்தக்கது. விவசாயிகள், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியையும் அன்றாட வாழ்வாதாரத்திற்குப் பயன்படும் தொழிலாகக் கருதுகின்றனர். இந்தியா ஒரு விவசாய நாடு என்றால் அதில் முதலிடம் பால் வளத்திற்குத்தான் உள்ளது. ஆவின் மூலம் தைத் திருநாளாம் பொங்கலுக்கு 100 மி.லி. அளவில் மொத்தம் 2 கோடியே 15 லட்சம் நெய் பாட்டில்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

19 லட்சம் பால் உற்பத்தியாளர்கள்

19 லட்சம் பால் உற்பத்தியாளர்கள்

இது உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின்படி சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறது. ஆவின் நெய் விற்பனை மூலம் தோராயமாக ரூ.135 கோடி வருமானம் கிடைக்க உள்ளது. மாவட்டக் கூட்டுறவு ஒன்றியங்களில் உள்ள 19 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் அதாவது கால்நடை விவசாயிகள் பயன்பெறுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
aavin management has welcomed the inclusion of aavin Ghee in the package announced by the Government of Tamil Nadu on the occasion of Pongal festival
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X