சென்னையில் "ஆவின் பால்" விலை உயர்வு? மளிகைக் கடை - சூப்பர் மார்க்கெட்டுகளில் ஆவின் பால் விலை எவ்வளவு?
சென்னை: சென்னையில் தனியார் பாலைவிட ஆவின் பால் அதிகம் விற்பனையாவதாக தகவல் வெளியாகி உள்ளது, பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.
ஆவின் பால் பல்வேறு தரங்களில் விற்பனை செய்யப்படுகிறது... தனியாரை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.20 வரை குறைவாக இருப்பதால் மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்..

கொள்முதல்: காரணம் தனியார் பால் பாக்கெட்டைவிட ஆவின் பால் பாக்கெட் விலை குறைவாகும். இந்த நிலையில், பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆரஞ்சு பால் பாக்கெட் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது.
அந்தவகையில், சென்னையில் ஆவின் பால் பாக்கெட் ஆரஞ்சு, பச்சை, புளூ என 3 வகை பாக்கெட்டுகளில் விற்கப்பட்டு வருகிறது.. இதில் ஆரஞ்சு பால் பாக்கெட் கார்டுதாரராக இருந்தால் அரை லிட்டர் 24 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதே பாலை, ஆவின் பார்லரில் வாங்கினால் 30 ரூபாய்க்கு வேண்டி உள்ளது.. மளிகை கடைகளில் 32 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது..
பச்சை கலர் பாக்கெட்: பச்சை பால் பாக்கெட் அரை லிட்டர் கார்டுதாரர்களுக்கு ரூ.20-க்கு கிடைக்கும்... இதுவே, ஆவின் பார்லரில் ரூ.22-க்கு விற்பனையாகிறது. மளிகை கடைகளிலோ, ரூ.24-க்கும் விற்கப்படுகிறது.. அதேபோல, புளூ கலர் பாக்கெட் பால் அரை லிட்டர் கார்டுதாரர்களுக்கு ரூ.18.50-க்கு கிடைக்கிறது. ஆவின் பார்லரில் 20 ரூபாய்க்கும் மளிகை கடைகளில் ரூ.22-க்கும் விற்கப்படுகிறது. இப்படி விலைகளில் திடீரென மாற்றம் தென்பட்டுள்ளது சென்னைவாசிகளுக்கு குழப்பத்தையும், கலக்கத்தையும் உண்டுபண்ணி வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து மளிகைக் கடைக்காரர் தரப்பில் சொல்லும்போது, "பால் பாக்கெட்டுகளை கடைக்கு கொண்டு வருபவர் 50 பைசா லாபம் வைத்துதான் எங்களிடம் தருவார்... எங்களுக்கு அடக்க விலையே 20 ரூபாய் 50 பைசா வந்துவிடுகிறது.. அதனால், அதன் மீது ரூ.1.50 வைத்து, 22 ரூபாய்க்கு பால் பாக்கெட்டை நாங்கள் விற்கிறோம்.
ஆனால் சூப்பர் மார்க்கெட்டுகளில் அப்படியில்லை.. அவர்கள் பில் போடுவதால் எம்.ஆர்.பி. விலை ரூ.20-க்குதான் விற்க வேண்டியிருக்கிறது.. ஆனால், அதைவிட கூடுதலாக இப்போது பால் விற்பதாக தகவல் வருகிறது.,..
சூப்பர் மார்க்கெட்: சென்னையில் ஆவின் பால் பாக்கெட் குறிப்பிட்ட நேரத்தில் இதற்கு முன்பெல்லாம் வந்து விடும். ஆனால் கடந்த சில மாதங்களாகவே, பால் வந்து சேர்வதில் தாமதம் ஏற்படுகிறது.. அதனால், முன்பைபோலவே, பால் வினியோகத்தை கண்காணித்து அதிகாலையிலேயே எங்களுக்கு பால் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications