Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“தலைவலி” தரும் பிரச்சனை! ஆவின் நிறுவனத்தின் முக்கிய நகர்வு.. பால் உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலட்டுதன்மையுடைய மாடுகளினால் பால் உற்பத்தியாளர்கள் பெரும் பொருளாதார இழப்பினை சந்திக்கும் நிலையில், மலத்தன்மை நீக்க சிகிச்சை முகாம்களில் கலந்துகொண்டு பயனடையுமாறு ஆவின் நிறுவனம் அறிவுறுத்தி இருக்கிறது.

இதுகுறித்து அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிவிப்பில் தெரிவித்து உள்ளதாவது, "ஆவின் நிறுவனத்தின் மூலம் கறவையின மலட்டுதன்மை நீக்க மருத்துவ முகாம்கள் கறவை மாடுகளுக்கு தொடர்ந்து மூன்று முறை செயற்கைமுறை கருவூட்டல் செய்தும் அக்கருவூட்டல்கள் மூலம் சினை நிற்காத மாடுகள், கன்று ஈன்று மூன்று மாதங்கள் ஆன பின்பும் சினைக்கு வராத மாடுகள் மற்றும் 18 மாத வயதை அடைந்தும் பருவத்திற்கு வராத கிடேரிகள் ஆகியன மலட்டுதன்மையுடைய மாடுகள் ஆகும்.

Aavin organising Cow Infertility Treatment camp in all districts of Tamilnadu

இம்மலட்டுதன்மையுடைய மாடுகளினால் பால் உற்பத்தியாளர்கள் பெரும் பொருளாதார இழப்பினை சந்திக்கின்றனர் . கறவை மாடுகள் தொடர்ந்து சினை பிடித்தால்தான் அம்மாடுகள் கன்று ஈன்று பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு தொடர்ந்து பால் வழங்க இயலும். எனவே, பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் மூலம் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில், மலட்டுதன்மை நீக்க சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

பால் உற்பத்தியாளர்கள் இம்மலட்டுத்தன்மை நீக்க சிகிச்சை முகாம்களில் தங்களின் கறவை மாடுகளை கொண்டு வந்து அவர்களது கறவைகளுக்கு தேவையான மலட்டுதன்மை நீக்க சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். பால் உற்பத்தியாளர்கள் தங்கள் கறவைகளுக்கு மேற்கூறியவாறு மலட்டுதன்மை இருப்பின் தங்கள் சங்க "ஆவின்" நல ஊழியரையோ அல்லது சங்க செயலாளரையோ அணுகி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய கால்நடை மருத்துவர் மூலம் நடத்தப்படும் மலட்டுதன்மை நீக்க சிகிச்சை முகாம்களில் தங்கள் மாடுகளை காண்பித்து பலனடைய கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

அவ்வாறாக கடந்த 24.04.2023 அன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் (RGM) திட்ட நிதியில் சிறப்பு மலட்டுதன்மை நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது. அம்முகாமில், 32 கறவை மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் சிகிச்சை அளிக்கப்பட்டது, 157 சினைக்கு வராத மாடுகளுக்கும், 73 சினை நிற்காத மாடுகளுக்கும் மலட்டுதன்மை நீக்க சிகிச்சைகள் வழங்கப்பட்டுவிட்டன. இம்முகாம்கள் மூலம் 196 பால் உற்பத்தியாளர்கள் பயனடைந்தனர்." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+