பால், நெய், தயிர், மோர் போல இனி குடிநீரும் தயாரிப்பு.. ஆவின் நிறுவனம் அதிரடி.. ஒரு நாள் இலக்கு என்ன?
சென்னை: ஆவின் நிறுவனம் குடிநீர் விற்பனை செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. நாளொன்று 1 லட்சம் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பால், தயிர், மோர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், மில்க் ஷேக், இனிப்பு உள்ளிட்டவைகளை விற்பனை செய்கிறது. இந்த நிலையில் குடிநீர் விற்பனையிலும் இறங்குவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலம் குடிநீர் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதற்கட்டமாக அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை குடிநீர் பாட்டில்களை அறிமுகம் செய்கிறார்கள். நாளொன்றுக்கு 1 லட்சம் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யவும் ஆவின் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தண்ணீர் பாட்டில்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளியை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் வெளியிட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி கோரும் குடிநீர் ஆலையானது அனைத்து சட்டப்பூர்வ உரிமங்களுடன், அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளின்படி கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் எடுப்பவரிடம் தேவையான அளவிற்கு குடிநீர் ஆலைகள் மற்றும் இயந்திரங்கள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ரூ 10-க்கு அம்மா குடிநீர் பேருந்து நிலையங்களில் வழங்கப்பட்டு வந்தன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை ஒழிக்கும் திமுக அரசு இந்த ரூ 10 குடிநீர் பாட்டில் விற்பனையையும் இல்லாமல் ஆக்கவே ஆவின் குடிநீர் என அதிமுகவினர் விமர்சித்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications