அடித்து ஆடுதே திருச்சி மாநகராட்சி! மொத்தமாக தட்டி தூக்க பிளான்.. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் சென்னையில் இருக்கும் பயன்படுத்தப்படாத கார்களை நீக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையை பின்பற்றி தற்போது திருச்சியிலும் இதே நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதன்படி சாலைகள் மற்றும் திறந்தவெளிகளில் கைவிடப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பயன்படுத்தப்படாத கார்கள், சேதமடைந்துள்ள பொதுக் கட்டடங்கள் மற்றும் இதர கட்டுமானங்கள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஏதுவாக, சேதமடைந்த மற்றும் சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் இதர கட்டுமானங்களை கண்டறிவது என்பது மிகவும் அவசியமாகிறது.

Abandoned vehicles on roads will be seized and auctioned: Trichy Corporation to buy a recovery truck

ஆகவே, சேதமடைந்துள்ள பொதுக் கட்டடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், விடுதிகள், பேருந்து நிலையங்கள், அலுவலக கட்டடங்கள் மற்றும் இதர முக்கிய உட்கட்டமைப்புகளான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், பாலங்கள் ஆகியவை குறித்து ஒரு ஒருங்கிணைந்த மதிப்பீடு மற்றும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டி பின்வரும் இனங்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் சென்னையில் இருக்கும் பயன்படுத்தப்படாத கார்களை நீக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. நடப்பு பருவமழை காலத்தில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தக்கூடிய கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக இருப்பதால், 15 நாட்களுக்குள் க்ளைம் செய்யாவிட்டால், சென்னைக்குள் இருக்கும் கைவிடப்பட்ட கார்கள் அனைத்தும் அகற்றப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதன்படியே பல்வேறு கார்கள் சென்னையில் அகற்றப்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் குப்பைகள் மற்றும் குப்பைகளை நீர்நிலைகளுக்கு அருகில் கொட்டுவதைத் தடுக்கவும், பொதுக் கழிவறைகளைப் பராமரிக்கவும், தேவையான சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதையும் நோக்கமாகக் கொண்ட திட்டத்தை மாநகராட்சி தொடங்கி வைத்துள்ளது.

திருச்சியிலும் நடவடிக்கை: இந்த நிலையில்தான் தற்போது திருச்சியிலும் இதே நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதன்படி சாலைகள் மற்றும் திறந்தவெளிகளில் கைவிடப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, அத்தகைய வாகனங்களை பறிமுதல் செய்ய மீட்பு லாரி வாங்க திருச்சி மாநகராட்சி மன்றத்தில் செவ்வாய்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நிறுத்த ஐந்து மண்டலங்களிலும் உள்ளாட்சி அமைப்பு உள்கட்டமைப்புகளை உருவாக்கும்.

நகரின் முக்கிய சாலைகளில் காலவரையின்றி நிறுத்தப்படும் வாகனங்கள், கைவிடப்பட்ட வாகனங்கள் எளிமையான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் பறிமுதல் செய்யப்படும். கைவிடப்பட்ட வாகனங்கள் நீர் தேங்கி கொசுக்களை உற்பத்தி செய்வதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது," என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அந்த வாகனங்கள் வாகனங்கள் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சாலையில் கைவிடப்பட்ட வாகனங்களை வாகன உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி உரிமை கோரத் தவறினால் வாகனங்கள் ஏலம் விடப்படும். 15வது மத்திய நிதிக் கமிஷன் நிதியில் கிடைக்கும் 22 கோடியில் இருந்து, ஒரு மீட்பு டிரக்கை வாங்க, 42 லட்சத்தை குடிமைப்பொருள் அமைப்பு ஒதுக்கியுள்ளது. இதேபோல், 39 லட்சத்தில் டிரக்கில் ஏற்றப்பட்ட லிப்ட் பிளாட்பார வாகனம் வாங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+